குஜராத் முதல்வரும் பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி மீது மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்த சிமி தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்துள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் நரேந்திரமோடி பேசிய மைதானம், பாட்னா ரயில்நிலையம் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 6 பேர்பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த தேசிய புலனாய்வு படையினர் சத்தீஸ்கர்மாநிலம் ராய்பூரை சேர்ந்த உமர்சித்திக் மற்றும் அப்துல்வாஹித் ஆகிய இருவரை கைதுசெய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்திய இஸ்லாமிய மாணவ அமைப்பான சிமி இயக்கத்தைசேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
காவல்துறையிடம் அவர்கள் அளித்த வாக்கு மூலத்தில், சிமி அமைப்பைசேர்ந்த மனித வெடி குண்டுகள் மோடிமீது தாக்குதல் நடத்த திட்டம்தீட்டி உள்ளனர். இந்த திட்டத்தை நிறைவேற்ற மோடிபேசும் பொதுக்கூட்ட மேடைகளின் அருகில் நின்று அவரது ஒவ்வொரு அசைவையும் மனிதவெடிகுண்டுகள் தீவிரமாக கண்காணித்து மோடியை கொல்ல தக்கநேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று கூறியுள்ளனர். மோடியைகொல்ல முஜாகிதீன் மற்றும் சிமி தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத் துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடதக்கது.
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.