ஆதர்ஷ் ஊழலில் காங்கிரஸ் முதல்வர்களுக்கு தொடர்பு நிரூபணம்

 மும்பையில், ராணுவவீரர்களின் குடும்பத்தினருக்காக கட்டப்பட்ட, “ஆதர்ஷ்’ அடுக்குமாடி குடியிருப்புகள், முறைகேடானவகையில் முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழல்தொடர்பாக, விசாரணை நடத்திய, இருநபர் குழு, அறிக்கை வெளியிட்டுள்ளது. அதை, மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் ., அரசு நிராகரித்துள்ளது. மாநில அரசின் இந்த செயல் பாட்டிற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மும்பையில் முன்னாள், இந்நாள் ராணுவவீரர்களின் குடும்பத்தினருக்காக, வீடுகள்கட்ட, மாநில அரசு திட்டமிட்டது. இதற்காக, மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியிடம் ஒப்புதல்பெறப்பட்டது. மும்பையின் முக்கிய பகுதியான, கொலாபாவில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. “1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த கார்கில்போரில் உயிர்த்தியாகம் செய்த, நம் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு, இந்த குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படும்’ என்று , மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் பலவீடுகள் ராணுவவீரர்களின் குடும்பத்தினருக்கு ஒதுக்கப்படாமல், அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, 2010ம் ஆண்டு, மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் , இது குறித்து விசாரணை நடத்த, சிபிஐ.,க்கு உத்தரவிட்டது. வழக்கு விசாரணையில், ஏராளமான அரசியல் தலைவர்களுக்கு இந்த ஊழலில் தொடர்புஇருப்பது உறுதியானது. எனினும், மாநில அரசின் குறுக்கீடால், சிபிஐ., யாரையும் கைதுசெய்யவில்லை. சிபிஐ., யின் செயல்பாட்டை, மும்பை உயர் நீதிமன்றம் வன்மையாக கண்டித்தது. உயர் நீதிமன்ற கண்டனத்தை அடுத்து, 2012ல், எட்டுபேர் மீது, சிபிஐ., வழக்குப் பதிவுசெய்து, கைதுசெய்தது. அதையடுத்து, இந்த ஊழல்தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல்செய்ய, முன்னாள் நீதபதி, ஜே.ஏ.பாட்டீல் மற்றும் முன்னாள் மாநில தலைமைச்செயலர், பி. சுபர்ணியன் அடங்கிய, இருநபர் குழுவை மாநில அரசு நியமித்தது. இந்தகுழு நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள்வெளியாயின.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஆதர்ஷ்குடியிருப்பு கட்டடத்தில் கட்டப்பட்டுள்ள, 102 வீடுகளில், 25 வீடுகள் முறைகேடான வகையில் தகுதியற்றநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 22 வீடுகள், அரசியல்வாதிகள்,” பினாமிகளின் பெயரில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதர்ஷ்குடியிருப்பு கட்டடம் கட்டப்பட்டுள்ள இடம், மாநில அரசுக்கு சொந்தமானது. அது, ராணுவத்திற்கோ அல்லது, மத்திய அரசுக்குசொந்தமானது அல்ல. முறைகேடான வகையில் ஒதுக்கப்பட்டவீடுகள், காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த முக்கிய தலைவர்களின் பினாமிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில முன்னாள் முதல்வர்கள், சுஷில் குமார் ஷிண்டே, விலாஸ்ராவ் தேஷ்முக், அசோக்சவான் மற்றும் தற்போதைய முதல்வர், பிருத்வி ராஜ் சவான் ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதர்ஷ் ஊழல் பற்றிய இரு நபர் விசாரணைக்குழு அறிக்கை, மாநில சட்டசபையில் தாக்கல்செய்யப்பட்டது. அதில், ஆதர்ஷ் குடியிருப்பு மாநில அரசின் நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதை மட்டும் மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

முன்னாள் முதல்வர்கள் மீதான குற்றச்சாட்டை ஏற்கமறுத்துள்ள அரசு, இந்த அறிக்கையை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, மாநில முன்னாள் முதல்வர், அசோக்சவானிடம், ஆதர்ஷ் ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ., விசாரணை நடத்த, கவர்னர், சங்கர நாராயணன் அனுமதி மறுத்துள்ள நிலையில், இருநபர் விசாரணைக்குழு அறிக்கையை மாநில கேபினட்குழு நிராகரித்துள்ளது, எதிர்க்கட்சியினரை கொதிப்படையச் செய்துள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...