எங்கள் வேட்பாளர் விலை போகவில்லை. அவர் தவறு செய்திருக்கலாம், துரோகம் செய்ய மாட்டார்

 தேர்தலுக்குப் பிறகு யாருடைய ஆதரவையும் நாடவேண்டிய நிலை நரேந்திர மோடிக்கு ஏற்படாது . நீலகிரி பாஜக வேட்பாளர் குருமூர்த்தி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. எங்கள் வேட்பாளர் விலை போகவில்லை. அவர் தவறு செய்திருக்கலாம், துரோகம் செய்ய மாட்டார். என பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும் தென்சென்னை பாஜக வேட்ப்பலருமான இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; பாஜக தேர்தல் அறிக்கையை பொருளாதார, அரசியல்நிபுணர்கள் பாராட்டியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய முயற்சியால் மாநில அரசுகளுக்கான முக்கியத்துவம், மரியாதை, உரிமைகள் கிடைக்கும்.

மத்திய அரசு ஆளும் மாநிலங்களில் ஒருகண்ணோட்டம், மற்ற மாநிலங்களில் வேறு கண்ணோட்டம் என்ற நிலை அடிபட்டுப்போகும். வாஜ்பாய் காலத்திலே நதிகள் இணைப்புக்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. கங்கைகாவிரி இணைப்புக்கு அதிகசெலவாகும் என்பதால், விந்தியத்துக்கு வடக்கே, தெற்கே என பிரித்து, தென்னகநதிகள் இணைப்பு திட்டத்தை அமல்படுத்துவது, கிராமங்களுக்கான கால் வாய் அமைப்பது முதற்கொண்டு அப்போதே திட்டமிடப்பட்டுவிட்டது. தென்னக நதிகளை பொருத்தவரை மகா நதி-கோதாவரி-கிருஷ்ணா ஆகிய நதிகளை இணைத்து ஒகேனக்கல்லுடன் இணைக்க திட்டமிடப்பட்டது.

ராமர் சேதுபாலம் நமது நாட்டின் கலாச்சார பாரம்பரிய சின்னமாகும். இப்பாலத்துக்கு குந்தகம் ஏற்படாமல் சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த 4வது பாதை வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே பரிந்துரைக்கப்பட்டது. ராமர்பாலத்துக்கு குந்தகம் ஏற்படாமல் சேதுதிட்டம் நிறைவேற்றுவதில் ஆட்சேபம் இல்லை.

பொது சிவில்சட்டம் பற்றி அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலமைப்புச் சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் அரசியலமைப்புச் சட்டவரையறைக்கு உட்பட்டு ராமர்கோயில் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தீர்ப்பு வந்தபிறகு ராமர் கோயில் கட்ட சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். ராமர்கோயில் கட்டுவது எங்களது அடிப்படைக் கொள்கை.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகைசெய்துள்ள அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவதுகுறித்து அனைத்து தரப்பினருடன் விவாதிக்கப்படும் என்றுதான் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவாதிப்பது எப்படி தவறாகும்?

அண்டை நாடுகள், அண்டைமாநிலம் குறித்து பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகளான இலங்கை தமிழர் நலன், தமிழக மீனவர்கள் நலன் குறித்த தகவல்கள்கொண்ட துணை தேர்தல் அறிக்கை வெளியாகும் என நினைக்கிறேன்.

நீலகிரி பாஜக வேட்பாளர் குருமூர்த்தி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. எங்கள் வேட்பாளர் விலை போகவில்லை. அவர் தவறு செய்திருக்கலாம், துரோகம் செய்ய மாட்டார். ஏ.பி. படிவத்தை எடுத்துச் செல்லும் போது விபத்து ஏற்பட்டதால் தாமதம் ஆகியிருக்கிறது. அதற்காக வேட்புமனுவை நிராகரித்துள்ளனர். அது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

பாஜக 272 இடங்களில் வெற்றிபெறும். கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெறும் இடங்களையும் சேர்த்தால் 300-ஐ தாண்டும். தேர்தலுக்கு பிறகு யாரிடமும் ஆதரவுகேட்கும் நிலை நரேந்திர மோடிக்கு ஏற்படாது. தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க பா.ஜ.க,.வோடு போய்ச் சேரும் என்று கூறுவது திசைதிருப்பும் முயற்சியாகும். கருணாநிதியைப் பொருத்த வரை தி.மு.க எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அது, மதச்சார்பற்ற கூட்டணி. அக்கட்சி இல்லாத கூட்டணி, மதவாத கூட்டணி. அவர்கள் எங்களோடும் கூட்டணி வைத்துள்ளார்கள். மதவாத கூட்டணி கோஷம் மக்களிடம் எடுபடாது. பா.ஜ.க.,வுக்கு கோகுலம் மக்கள்கட்சியும், தமிழக மருத்துவ நாவிதர் பேரவையும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றார் இல.கணேசன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...