பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அரசின் 100 நாள் சாதனை பட்டியலை முதல்-மந்திரி பட்னாவிஸ் வெளியிடுகிறார்

 மராட்டியத்தில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அரசின் 100 நாள் சாதனை பட்டியலை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாளை வெளியிடுகிறார்.

மராட்டியத்தில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாத போதிலும் கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி அக்கட்சி தனித்து ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக 44 வயது தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் ஆட்சியில் சிவசேனா பங்கு பெற்று கூட்டணி அரசாக மாறியது. இந்த அரசு அமைந்து ஜனவரியுடன் 3 மாதங்களை நிறைவு செய்துவிட்டது. அரசு தனது 100-வது நாளை நெருங்கி கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் அரசின் 100 நாள் சாதனை பட்டியலை வெளியிட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முடிவு செய்து உள்ளார். இதற்காக மத்திய அரசில் பிரதமர் நரேந்திர மோடி பாணியில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் தனது மந்திரி சபை சகாக்களிடம் இதுவரை செய்த சாதனை பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளார். பா.ஜனதா மற்றும் சிவசேனாவை சேர்ந்த அனைத்து மந்திரிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சிவசேனாவை சேர்ந்த தொழில் துறை மந்திரி சுபாஷ் தேசாய் கூறுகையில், "மந்திரிகள் தங்களது இலாகாக்களில் இதுவரை செய்த பணிகள், நிறைவேற்ற முடிவு செய்துள்ள முக்கிய திட்டங்கள் பற்றிய பட்டியலை தாக்கல் செய்யும்படி எங்களுக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டு இருக்கிறார். அதன்படி நானும் எனது இலாகாவில் செய்த பணிகளை விவரித்து பட்டியலை தாக்கல் செய்துள்ளேன்" என்றார்.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் 'மராட்டியத்தில் உருவாக்குவோம்' என்ற திட்டத்தின் கீழ் மாநிலத்தை வளர்ச்சியடைய செய்ய உறுதிபூண்டு உள்ளார். அதன் ஒருகட்டமாக அவர் தனது அரசின் 100 நாட்கள் சாதனை பட்டியலை வருகிற 7-ந் தேதி (நாளை) பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட முடிவு செய்து உள்ளார்.

இதற்காகவே அனைத்து மந்திரிகளிடமும் சாதனை பட்டியலை கேட்டு உள்ளார். பா.ஜனதா கட்சி மாநில வளர்ச்சியை முன்னிலைப்படுத்தியே வாக்கு சேகரித்தது. அதனை நம்பி மக்களும் பா.ஜனதாவுக்கு அதிகாரம் கொடுத்து உள்ளனர். இதனால் மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மந்திரிகளிடம் சாதனை பட்டியலை முதல்-மந்திரி கேட்டு உள்ளார்.

குறிப்பாக உணவு மற்றும் வினியோகத்துறை 'பயோமெட்ரிக்' முறையை அமல்படுத்த திட்டமிட்டு உள்ளது. சேவை உரிமை மசோதாவை பொது நிர்வாகத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. காலாவதியான திட்டங்களை சீரமைக்க சமூக நீதித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற அம்சங்கள் சாதனை பட்டியலில் இடம்பெறும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...