பிரதமரை விமர்சிப்பதை நிதீஷ் குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும்

 பாராளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2015-16ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு பலனளிக்கும் விசயங்கள் அறிவிக்கப் பட்டுள்ளதை தொடர்ந்து பிரதமரை விமர்சிப்பதை நிதீஷ் குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரி பஸ்வான் கேட்டுக் கொண்டுள்ளார்.

ராம் விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், எய்ம்ஸ் போன்ற அமைப்பை உருவாக்குதல் என்ற அறிவிப்பு, ஆந்திர பிரதேசம் வரிசையில் சிறப்புநிதி ஒதுக்கீடு மற்றும் பிறசலுகைகள் மத்திய பட்ஜெட்டில் பீகாருக்காக அறிவிக்கப்பட்டு உள்ளது அதன் எதிர் காலத்திற்கு சிறந்தது.

இதனை அனைவரும் பாராட்ட வேண்டும். மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் நலன்குறித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தே.ஜ.,கூட்டணி அரசுகளுக்கு இடையேயான அணுகு முறையில் உள்ள வித்தியாசத்தை பீகார் முதல் மந்திரி கவனத்தில் கொள்ளவேண்டும்.

அந்த மாநிலத்தின் சிறப்புநிதி ஒதுக்கீடுக்கான நியாயமான தேவையைகூட முந்தைய அரசு தவிர்த்தது. பீகார் மக்களின் நலன்களுக்காக செயல் படும் வகையில் மோடி அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு மற்றும் பிற சலுகைகளை நேரடியாக அறிவித்துள்ளது. மோடி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை தொடர்ச்சியாக நிதீஷ்குமார் தாக்கி பேசிவரும் நிலையில் மோடி சலுகைகளை அறிவித்துள்ளார்.

மோடி மீது மோசமான அணுகு முறையை பலவருடங்களாக கொண்டிருக்கும் நிதீஷ் குமார் , கடந்த ஜூன் 2010ம் ஆண்டில் பாட்னா நகரில் அப்பொழுது குஜராத் முதல் மந்திரியாக இருந்த நரேந்திரமோடி உட்பட பாரதீய ஜனதா தலைவர்களின் கூட்டத்தில் இரவு விருந்தில் கலந்துகொள்ளாமல் ரத்து செய்ததை நினைவு கூர்ந்தார்.

மத்தியில் மோடி தலை மையிலான அரசு பீகாரின் முன்னேற்றத்திற்கான தனது நோக்கத்தை செயல்வடிவில் வெளிப்படுத்தி யுள்ளதால், பாஜக மற்றும் பிரதமருக்கு எதிரான தொடர்ச்சியான மோசமான விமர்சனத்திற்காக குமார் மன்னிப்புகேட்க வேண்டும் என பஸ்வான் கேட்டு கொண்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...