பிரியத்துக்குரிய சகோதர நாடு துயரத்திலிருந்து வேகமாக மீண்டெழும்

 நில நடுக்கத்தால் நேபாளத்துக்கு ஏற்பட்டுள்ள வேதனையை பகிர்ந்துகொள்வோம். நம் பிரியத்துக்குரிய அந்த சகோதர நாடு துயரத்திலிருந்து வேகமாக மீண்டெழும்

புத்தரின் பிறப்பிடமும், நமது பிரியத்துக் குரிய சகோதர நாடுமான நேபாளம் பெரும் இடர்பாட்டில் சிக்கியுள்ளது. இந்த கடினமான சூழலைத் தாங்கவேண்டிய நிலையில் நோபாள மக்கள் உள்ளனர். இந்தப் பயணம் எவ்வளவு தூரம் என்பதையும், சிரமத்துக்குரியது என்பதையும் கற்பனைசெய்வது கடினம். நேபாள மக்களின் வலியை நாம் பகிர்ந்துகொள்வோம். அவர்களுக்கு புதிய சக்தியைத் தருவதற்காக புத்தரை வேண்டுவோம்.

உலகம் பேரழிவை நோக்கிச்சென்று கொண்டிருக்கும் போது, புத்தரின் கோட்பாடுகள் நல்லவழியைக் காட்டும். வன்முறை உச்சத்தில் இருக்கிறது. உலகின் பெரும் பகுதி குருதியில் நனைந்திருக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும் மற்றவரின் ரத்தத்துக்காக அலைகிறார்கள். ரத்தம்சொட்டும் இத்தருணத்தில், கருணைக்கான செய்தி எங்கிருந்து வரும். புத்தரும், அவரது கொள்கைகளுமே நமக்கான ஒரே சேரிடம்.

அதிகாரமும் செல்வமும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கப் போது மானவை எனச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அன்பும் இரக்கமுமே மனிதனுக்கு நலன் விளை விக்கும் மிகப்பெரிய சக்திகள் என்பதை உணர்ந்திருந்தார்.

போர் மற்றும் வன்முறை ஆகிய உலகின் பெரும் பிரச்சினை களிலிருந்து விடுபட புத்தரின் காலத்தால் அழிக்க முடியாத போதனைகளான அன்பும் கருணையும் சிறந்த தீர்வாக அமையும். போரிலிருந்து விடுபட புத்தரின் பாதையில் நடங்கள். நீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள். 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமூகத்தில் புரட்சி ஏற்படவிரும்பியவர் புத்தர். அதைப்பற்ற தற்போதும் விவாதிக்கிறோம். அவரின் போதனைகள் தற்காலத்துக்கும் ஏற்றவை.

புத்தருடன் தொடர்புடைய பொருட்கள் கிடைத்த குஜராத்தின் வத்நகர் பகுதியில் புத்தவிஹாரம் கட்டுவதற்கான திட்டம் உள்ளது. என்று புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோடி பேசினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...