மத்திய அரசை ஆர்எஸ்எஸ் நிர்பந்திக்கவில்லை

 மத்திய அரசை ஆர்எஸ்எஸ் நிர்பந்திக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளரிடம் கூறியதாவது:

மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், ராஜ்நாத் சிங் ஆகியோரும், நானும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் செயல் உறுப்பினர்களாவோம். நான் தற்போதும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர்தான். இதை தெரிவிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்து டனான எங்களது சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினோம். ஆர்எஸ்எஸ் அமைப்பு எனது வாழ்க்கையின் ஒருபகுதியாகும். இதேபோல் தான், பாரிக்கர், ராஜ்நாத்சிங் ஆகியோருக்கும். மோடி அரசுக்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் இருந்து எந்தநிர்பந்தமும் அளிக்கப்படவில்லை.

மோடி அணிந்த மேல்சட்டையின் விலை ரூ.15 லட்சம் என சிலர் தெரிவிக்கின்றனர். அதற்கான பணத்தை அவர்களா செலுத்தினார்கள்? எங்கு செலுத்தினார்கள்? ராகுல் காந்தி செலுத்தினாரா? ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரசாரகராக மோடி இருந்தபோதில் இருந்து அவருடன் தொடர்பில் இருந்த குஜராத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர்தான், மோடிக்கு அந்த மேல்சட்டையை பரிசாக அளித்தனர் என்றார் நிதின் கட்கரி.

மத்திய அரசில், பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே அனைத்து முடிவுகளையும் எடுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு நிதின் கட்கரி பதிலளிக்கையில், "பாஜக ஜனநாயகக் கட்சியாகும். கட்சிக்கு தலைவர் இருக்கிறார். அவரும் சிறந்த அனுபவமிக்கவராவார். ஆதலால், ஒரு நபரால் அதிகாரம் செலுத்த முடியாது. மத்திய அமைச்சரவைக் கூட்ட விவாதங்களின்போது, அமைச்சர்கள் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கின்றனர்' என்றார்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மனோகர் பாரிக்கர், நிதின் கட்கரி ஆகியோர் அண்மையில் சந்தித்துப் பேசினர். இதேபோல், பாஜக தலைவர் அமீத் ஷாவும் மோகன் பாகவத்தை சந்தித்துப் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...