ரயில்வே துறையில் தன்னிச்சையான ஒழுங்குமுறை ஆணையம்

 ரயில்வே துறையில் தனியார்துறை, தன்னிச்சையான ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிபுணர்குழு பரிந்துரைத்துள்ளது.

ரெயில்வேயை சீரமைப்பது குறித்து சிபாரிசு செய்வதற்காக, பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓர் உயர்மட்ட வல்லுனர்குழுவை அமைத்தார். 'நிதி ஆயோக்' உறுப்பினர் பிபெக்தெப்ராய் தலைமையில் இக் குழு அமைக்கப்பட்டது. ரெயில்வே வாரியத்திடம் இந்தகுழு தனது 300 பக்க இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், அதிரடியாக பல்வேறு சீர்திருத்த நடவடிக் கைகளை சிபாரிசு செய்துள்ளது. இதை ரெயில்வே அமைச்சகம் ஆய்வுசெய்து விட்டு, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கும்.அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

சாலை, சிவில் விமான போக்கு வரத்து, தொலைத் தொடர்பு போன்ற பிறதுறைகளுடன் ஒப்பிடுகையில், ரெயில்வே துறையில் தனியார்பங்களிப்பு குறைவாகவே உள்ளது.ரெயில்கள் இயக்கத்தில் தனியாரையும் அனுமதிக்க வேண்டும்.இதற்காக, இந்தியரெயில்வே ஒழுங்குமுறை ஆணையம் என்ற சட்டப் பூர்வ, சுயேச்சையான அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கு தனிபட்ஜெட் போடவேண்டும். சரக்கு கட்டணங்களை நிர்ணயித்தல், சர்ச்சைகளுக்கு தீர்வுகாணுதல், தொழில்நுட்ப தரத்தை நிர்ணயித்தல் போன்ற பணிகளை அந்த அமைப்பு செய்யவேண்டும். ரெயில்களை இயக்குவதுதான் இந்திய ரெயில்வேயின் முக்கிய பணியாக இருக்கவேண்டும். அதனால், பள்ளி மற்றும் மருத்துவமனைகள் நடத்துவதை கைவிட வேண்டும்.

மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ரெயில்வேபோலீசின் ஒட்டுமொத்த செலவையும் அந்தந்த மாநில அரசே ஏற்குமாறு கூறவேண்டும். நாங்கள் சிபாரிசுசெய்த செயல் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் அமல் படுத்தினால், ரெயில்வேக்கு என தனிபட்ஜெட் தேவைப்படாது என்பன உள்ளிட்ட மேலும் சில பரிந்துரைகள் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...