திமுக. தலைவர் கருணாநிதி வாகனசோதனை செய்து பொதுமக்களையும் வியாபாரிகளையும் தொந்தரவு செய்வதாக அறிக்கை விட்டுள்ளார். பொதுமக்களும் வியாபாரிகளும் கொண்டு-செல்லும் பணத்திற்கு ஆவணம் வைத்துக்கொள்ள வேண்டும் என சொல்லும்-அதிகாரிகள் அவர்களை துன்புறுத்தாமல் தங்களது கடமையை செய்ய பா ஜ க கேட்டு கொள்கிறது.
ஆளும் கட்சியும் கருணாநிதியும் 108 -ஆம்புலன்ஸ் சேவையை தவறாகபயன்படுத்தி பணத்தை ஒருசில அதிகாரிகளின் துணையோடு கடத்துவதாக தெரிகிறது . அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே அரசின்-கையாலாகாத தனத்தால் உருவாகும் மின்வெட்டையும் பயன்படுத்தி, மேலும் வேண்டும்மேன்றே மின்வெட்டை உருவாக்கி தமிழகம் இருளில் மூழ்கியுள்ள நேரத்தில் வாக்குகளைகவர இலவச பொருட்களும், பணமும் கடத்தப்படுகிறது.
இதன்காரணமாக தேர்தல்கமிஷன் 108 ஆம்புலன்ஸ் வண்டிகளை நன்றாக முழுவதுமாக சோதனை செய்ய வேண்டும் , மின்வெட்டை தேர்தல் முடியும் வரையாவது உடனடியாக நீக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி கேட்டுக்கொள்கிறது.என்று பொன்.ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார் .
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.