ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய பின் அதில் 1௦ கிராமும், 1௦ கிராம் வெங்காயத்தையும் வைத்து நைத்து, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி காலை மாலை தொடர்ந்து ஏழுநாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும்.
இதில் இருவகையுண்டு. காட்டு இலந்தை, நாட்டு இலந்தை, மேலும் சீமை இலந்தை என்றும் சொல்வார்கள். இதன் பழம் புளிப்பும், துவர்ப்பும், இனிப்பும் உடையதாக இருக்கும்.
இதன் கொழுந்து இலை, பழம், பட்டை, வேர், வேர்ப்பட்டை, கட்டை, சமூலம், மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
இலை துவர்ப்புடையதாக இருக்கும். பழம் இனிப்பும், புளிப்பும், உடையதாக இருக்கும். இது குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. இதன் வேர் அயர்ச்சியைப் போக்கிப் பசியை உண்டாக்கும். இதன் இலை மூலம், இரத்த அதிசாரம் தேக எரிச்சல், வயிற்றுக்கடுப்பு, பித்தமேகம் ஆகியவற்றைப் போக்கும். பழம் பித்தமூர்ச்சை, அரோசகம், வாந்தி, வலி, வாதம் முதலியவற்றையும் போக்கும்.
பச்சை இலையை அரைத்து சிறு எலுமிச்சங்காயளவு புளித்த மோரில் சாப்பிட மூலம் போகும். இதன் இலையைப் பவளபற்பம் செய்ய உபயோகிப்பார்கள். இலையையும், பட்டையையும் சேர்த்து குடிநீர் செய்து இரத்த அதிசாரம், வயிற்றுக் கடுப்பு ஆகியவற்றுக்குக் கொடுக்கலாம்.
துளிரையும் இழந்த கட்டையையும் நன்கு அரைத்து கட்டிகள், கொப்புளங்கள் முதலியவற்றிற்கு வைத்து மேல்கட்டி வரப் பழுத்து உடையும்.
பழத்தை உலர்த்தி கொட்டைநீக்கி உட்கொள்ள தீராத கபநோய் போகும். கபத்தை வெளித்தள்ளும், மலத்தைப்போக்கும். கொட்டையை நீக்கிவிட்டு, தசையுடனும், தோலுடனும், மிளகாயும், உப்பும் சேர்த்து அரைத்து வில்லை தட்டி உலர்த்தி வைத்துக் கொண்டு ஒரு கடுக்காய் அளவு காலையில் கொடுத்து வர பித்தவாந்தி, ஆரோசனம் நீங்கி தீபனம் (பசி) உண்டாகும்.
பட்டையையும், இலையையும் இடித்துப் போட்டு நீரில் கொதிக்க வைத்து வாத ரோகிகளைக் குளிக்க செய்தால் உடல்வலி போகும். பட்டையை உலரவைத்து இடித்துத் தூளாக்கிப் பழைய ஆறாத புண்களுக்கு வைத்துக் கட்ட புண் ஆறும். பட்டையைக் கியாழமிட்டு, சுரத்துக்கும், சன்னிக்கும் கொடுக்கலாம்.
ஒரு கைப்பிடியளவு கொழுந்து இலையை மைபோல அரைத்து, உரித்து எடுத்த வெள்ளைப் பூண்டின் பற்கள் 2௦, அரைத் தேக்கரண்டியளவு மிளகையும் வைத்து மறுபடி அரைத்து எடுத்து, அந்த விழுதை வாயில் போட்டு விழுங்கி வெந்நீர் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு காலை, மாலை தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால் மூளைக் காய்ச்சல் குணமாகும். இந்த மூன்று நாட்களும் உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும்.
இலந்தை மரத்தின் கொழுந்து இலையைக் கொண்டு வந்து, ஒரு கைப்பிடியளவு எடுத்து, 1௦ கிராம் சீரகம், 1௦ கிராம் வெங்காயம் இவைகளை அம்மியில் வைத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால், சீதபேதி மூன்றே நாட்களில் குணமாகும்.
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.