8 ஆண்டுகளில் தேசியளவில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன

கரூர் மாவட்டம் குளித்தலையில் பாஜகசார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் 8 ஆண்டுகள் சாதனை குறித்து விளக்க பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கரூரில் பாஜக ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தவேண்டும் என்று மாவட்டத் தலைவர் கேட்ட போது, குளித்தலையில் தான் கூட்டம் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினேன். ஏனெனில் இதுவரை பாஜக கால்பதிக்காத இடங்களில், கூட்டம் சேராத இடங்களில் செய்துகாட்ட வேண்டும்.

அதற்காகதான் இப்படியொரு பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அதுமட்டுமின்றி பாஜகவின் வளர்ச்சி இது போன்ற சிறு சிறு நகரங்களில்தான் இருக்கப் போகிறது. அதை நோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்றார். கடந்த 8 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜக அரசின் நலத்திட்ட உதவிகள்பலவும் குளித்தலை மக்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த குளித்தலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல பல்வேறு திட்டங்கள் வைத்துள்ளோம்.

1957ல் குளித்தலை தொகுதியில் நடந்த இரண்டாவதுதேர்தலில் கருணாநிதி போட்டியிட்டு முதல்முறை வெற்றி பெற்றார். கொள்கைரீதியாக திமுக, பாஜகவும் நேரெதிர் கட்சிகள். இருந்தாலும் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழகமக்களுக்கு நல்லது செய்திருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் 1957ல் இருந்த திமுகவும், 2022ல் இருந்த திமுகவும் ஒரேகட்சியா? என்றால் நிச்சயம் கிடையாது.

ஒரு குடும்பத்திற்காக கட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள். குளித்தலை தொகுதியில் ஒவ்வொருமுறையும் திமுகவிற்கு ஓட்டுபோட்டு வெற்றிபெறச் செய்திருக்கிறீர்கள். ஆனால் பின் தங்கிய தொகுதியாக குளித்தலை காட்சியளிப்பது திமுக எதுவும் செய்ய வில்லை என்பதை காட்டுகிறது. 70 ஆண்டுகள் திராவிடஆட்சி. ஆனாலும் மாற்றம் இல்லை. அதேசமயம் 8 ஆண்டுகளில் தேசியளவில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...