தம்மையும் குஜராத்தையும் பாராட்டியதற்காக காந்தியவாதியான அண்ணா ஹஸôரேவுக்கு எதிராக அவதூறுபிரசாரம் செய்யப்படலாம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .
லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட அண்ணா ஹஸôரே, குஜராத் மாநில முதல்வர்
நரேந்திர மோடி மற்றும் பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோர் வளர்ச்சிப்பணிகளை சிறப்பாக செய்துவருவதாக பாராட்டி இருந்தார் .
இதை தொடர்ந்து ஹஸôரேவுக்கு மோடி திறந்தமடல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதன்-விவரம்: எனது மாநிலத்தையும், என்னையும் நீங்கள் பாராட்டியதை கேள்விப்பட்டேன். இதற்காக நானும் எனதுமாநிலமும் உங்களுக்கு நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். எங்களுக்கான ஆசீர்வாதமாக இதை எடுத்து கொள்கிறேன்.
அதே நேரத்தில் குஜராத்மீது வெறுப்பு கொண்டிருக்கும் சிலரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அவதூறு-பிரசாரத்துக்கு நீங்கள் இலக்காக கூடும் என்கிற அச்சமும் எனக்கு உருவாகியுள்ளது .
உங்களது தியாகத்தையும், அன்பையும், சத்தியத்தையும் களங்கப்படுத்த அவர்கள் முயற்சிப்பார்கள். என்னையும் எனது மாநிலத்தையும் பற்றி நீங்கள் பேசியதால் கிடைத்திருக்கும் வாய்ப்பை உங்களை அவமானப்படுத்த பயன்படுத்தி கொள்வார்கள்.
இதுவரைக்கும் யார் யாரெல்லாம் என்னையும் குஜராத்தையும் பாராட்டி பேசினார்களோ அவர்கள்-அனைவருமே அவதூறு பிரசாரத்துக்கு இலக்காகி இருக்கிறார்கள். இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.
குஜராத்தினுடைய வளர்ச்சியை சிலாகித்து பேசியதற்காக கேரள-மார்க்சிஸ்ட் கட்சியைச்சேர்ந்த மூத்த நாடாளுமன்றவாதி அப்துல்லா குட்டி, கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார்.
குஜராத் மேம்பாட்டுப்பணிகள் தொடர்பான ஒருவிடியோவில் பணியாற்றியதற்காக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மீது அவதூறு பிரசாரம் செய்ய பட்டது. இந்த காரணத்துக்காக தேவ்பாண்ட் இஸ்லாமிய பள்ளியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த மெüலானா குலாம் வாஸ்தன்வி கடும்கண்டனத்துக்கு ஆளானார்.
அண்மையில் குஜராத்தை ஆதரித்து-பேசியதற்காக இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் ஐஎஸ்.சின்காவை குஜராத்தை-வெறுக்கும் குழுக்கள் கடுமையாக விமர்சித்தன.
குஜராத்தின் மீது வெறுப்பு கொண்டிருபோருக்கும் இங்குநடக்கும் வளர்ச்சிப்பணிகள் பிடிக்கவில்லை. குஜராத் பெயர் எங்கெல்லாம் குறிப்பிடப்படுகிறதோ அங்கெல்லாம் இவர்கள்-உடனடியாக வந்து அவதூறு பரப்ப தொடங்கிவிடுகின்றனர் என்று மோடி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் .
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.