ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி (Vitamin D) குறைப்பாடு. இது இயற்கையாகவே சூரியனின் புறஊதா கதிர்களின் (UV rays) மூலம் உடலில் உற்பத்தி ஆகும்.
உணவில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் உடலில் சேர்ந்து, எலும்புகள் உறுதியாக இருக்க வைட்டமின் டி உதவுகிறது. இதன் குறைப்பாட்டால் எலும்புகள் வலிமையிழந்து, எளிதில் உடையக்கூடிய நிலை ஏற்படும். இதனால் குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் (Rickets), பெரியவர்களுக்கு ஆஸ்டியோமலேசியா (Osteomalacia) என்ற நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் நம் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இதய நோய் வராமல் தவிர்ப்பதற்கும் வைட்டமின் டி அவசியம்.
பால், வெண்ணெய், முட்டை, சோயா பால், பாலாடைக்கட்டி, மீன் எண்ணெய், கானாங்கெளுத்தி, இறால், ஆட்டு ஈரல், காளான், ஆரஞ்சு, வைட்டமின் டி சேர்க்கப்பட்ட பால், வெண்ணைய், தானியங்கள், பழச்சாறு முதலியவை வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகள். அனைவரும் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியோர் அவசியம் இவ்வகை உணவை உட்கொள்ள வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில், நெருக்கமாக அமைந்த வீடுகள், அதிகம் வெளியில் நடமாடாமல் இருப்பது, முக்கியமாக குழந்தைகள் அதிகம் வெய்யிலில் விளையாடாமல் இருப்பது, சில உடை கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் சூரிய கதிர்கள் மூலம் நாம் அடைய வேண்டிய வைட்டமின் டி யை இழக்கிறோம். எனவே சூரியஒளி வாரம் இருமுறையாவது குறைந்தபட்சம் 15 நிமிடம் நம் உடலில் படுமாறு பார்த்துகொள்ளவேண்டியது அவசியம்.
நன்றி விஜயபாரதம்
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.