கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. எலும்புகளை வளர்க்கிற சுண்ணாம்புச் சத்து(கால்ஷியம்), இரும்புச்சத்து(அயன்) முதலிய உப்புச் சத்துக்களும் ஏ,பி,சி வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் கீரைகளில் உண்டு. இந்தச் சத்துக்கள் எல்லாம் எல்லாக் கீரைகளிலும் உண்டென்று கருதக்கூடாது. ஒவ்வொரு வகையான கீரையிலும் ஒவ்வொரு வகையான சத்துகளும் உப்புகளும் உள்ளன. இரத்தத்தை நன்னிலையில் வைப்பதற்குக் கீரைகள் மிகவும் உதவுகின்றன.

கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம்.

* கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் 'சி' போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.

 

அறுகீரையின் மருத்துவக் குணம்

இது குத்துச் செடியாகப் படரும். அறுத்துவிட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை என்று பெயர் உண்டாயிற்று. இதை அரைக்கீரை என்றும் கூறுவார். அறுகீரை, தாது புஷ்டி தருகிற கீரைகளில் ஒன்று. இதைப் புளியிட்டு சமைப்பது வழக்கம். புளியில்லாமல் மிளகு சேர்த்து நெய் இட்டுச் சமைத்துச் சாப்பிட்டால் தாது வளரும். வாயுவைப் போக்கும். குளிர்ந்த தேகத்தோருக்கு உதவும். மூலநோய் உள்ளவருக்கு ஆகாது.

இதன் கீரையை உண்டால் உடல் வெப்பமுறும். காமத்தைப் பெருக்கக் கூடிய சக்தி இதனிடம் உண்டு. இதன் கீரையை நன்றாக சமைத்து உண்ண சுரம், நடுக்கல், சந்நிபாதம், கபரோகம், வாதநோய் ஆகிய இவை போகும். தாது விருத்தியாகும்.

அறுகீரை விதையை ஒரு தேங்காய் எடுத்து ஒரு கண்ணைப் பொத்து விட்டு (ஓட்டைப் போட்டு) அதில் உள்ள தண்ணீரை நீக்கி, கீரை விதையை அதனுள் செலுத்தி, ஓட்டையை மூடி, சதுப்பு நிலத்தில் புதைத்து 40, 50 நாட்கள் சென்ற பின் எடுத்து ஓட்டை நீக்கி மற்றவைகளை நல்லெண்ணெயுடன் சேர்த்து எரித்து, தைலம் வடித்துத் தலை மூழ்கி வர சுரரோகம் போம், தலை முடி கறுத்து வளரும், பொடுகும் போகும்.

 

இவ்வாறு புலாந்திப்பழம் அல்லது நற்சங்கன்பழம் கொண்டு வந்து தைலம் வடித்து தலை மூழ்க அல்லது தலைக்குத் தடவி வர முடி கறுத்து முடி உதிராமல் பார்த்துக்கொள்ளும்.

சிறுகீரை

இதுவும் கீரைத்தண்டு இனத்தைச் சேர்ந்தது. ஆனால், இலைகள் சிறியவை. கீரைத்தண்டிலும், முளைக்கீரையிலும் இருப்பதுபோலவே, இந்தக் கீரையிலும் கால்ஷியம் என்னும் எலும்பை வளர்க்கிற சத்து உண்டு. கண் புகைச்சல், காசம், சோகை ஆகிய நோய்களைப் போக்கும். சூட்டைத் தணிக்கும். இதில் அயச்சத்து (இரும்புச் சத்து) உண்டு.

தூதுவளையின் மருத்துவக் குணம்

முள் உள்ள கொடி. இலையிலும் முள் உண்டு. இலையைக் குழம்பு செய்தும், துவையல் செய்தும் உண்பர். சிறு கசப்பு உண்டு. சீதளத்தைப் போக்கும். அறிவுக்குக் கூர்மையுண்டாக்கும். இது தாது புஷ்டி தருகிற கீரைகளில் ஒன்று. காதுமந்தம், காசம், தினவு, மந்தம் முதலிய நோய்கள் தீரும்.

பருப்புக் கீரையின் மருத்துவக் குணம்

இதைக் கோழிக்கீரை என்றும் கூறுவார். தேகம் குளிரும். கண்களுக்கு ஒளி உண்டாகும். பித்தம் போகும். குளிர்ந்த தேகத்தோருக்குச் சீதளம் செய்யும், அவர்கள் மிளகும், சீரகமும் சேர்த்துச் சமைத்து உண்பது நலம்.

பொன்னாங்கண்ணி மருத்துவக் குணம்

இதைப் பொன்னாங்காணி என்றும் கூறுவர். ஈரமான சதுப்புநிலங்களில் படரும். இதைச்  சாப்பிட்டால் கண்களுக்கு ஒளி உண்டாகும். கண் புகைச்சல், காசம், வாதம், அனல் முதலிய நோய்கள் தீரும்.

முளைக்கீரை

இந்தக் கீரையில், கால்ஷியம் என்னும் எலும்பை உறப்படுத்துகிற சத்து உண்டு. (தண்டுக்கீரை, சிறுகீரை, முருங்கைக் கீரைகளிலும் இந்தக் கால்ஷியம் உண்டு.) உடம்பின் வெப்பத்தைத் தணிக்கும். நீரைப் பெருக்கும். பசி உண்டாகும். குளிர்ந்த உடம்புக்குச் சீதளம் பண்ணும். வெள்ளைப்பூண்டு சேர்த்துச் சமைக்க வேண்டும். இதில் அயச்சத்து (இரும்புச்சத்து) உண்டு.

வசளைக்கீரை

இதில், கொடி வசளை என்றும், குத்து வசளை என்றும் இருபிரிவு உண்டு. கொடிவசளை கபம் உண்டாக்கும். ஆகவே இதனுடன் மிளகு, சீரகம் சேர்த்துச் சமைக்க வேண்டும். இக்கீரைகளில் ஏ,பி,சி என்னும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன; இரும்புச் சத்தும் உண்டு. இரும்பு இரத்தம் பெருகுவதற்கு அவசியமானது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத பாஸ்பரஸ் சத்தும் இதில் உண்டு. வசளைக் கீரை சூட்டைத் தணிக்கும். தாது உண்டாகும். வயிறு இளகும். பசி உண்டாகும்.

வெந்தயக் கீரை

இந்தக் கீரையைக் கூட்டு செய்தும், குழம்பு செய்தும் உண்ணலாம். மந்தம், வாயு, கபம், இருமல் இவை தீரும். வாயுவைக் கண்டிக்கும். இடுப்புவலி தீரும். மூலவாயு போகும். சூடு அதிகரிக்கும்.

மணித்தக்காளி கீரை

வாய் வேக்காடு (வாய்ப்புண்) உள்ளவர் இந்த இலையை சமைக்காமல் மென்று தின்றால் ஆறும். சமைத்தும் உண்ணலாம். சூட்டை ஆற்றும். நீரைப் பெருக்கும். கபம் போகும். இதன் காய்க்கும் இதுவே குணம்.

 

 

பசலைக்கீரை

பசலைக்கீரை என்றும் கூறுவர். தோட்டங்களில் தரையில் படர்ந்து வளரும். இலைகள் மிகச் சிறியவை. மெல்லிய கொடி. கொடியும், இலையும் சேர்த்துச் சமைப்பது வழக்கம். நீர்க்கடுப்பு, நீரடைப்பு போகும். மேகவெப்பு சாந்தியாகும். குளிர்ச்சியுண்டாகும்.

 

 

* இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ, குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் 'ஏ' ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

* கீரைகள் 'பி காம்ப்ளக்ஸ்' வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

மருத்துவக் குறிப்புகள், கீரை வகைகள், கீரை மசியல், கீரை சாம்பார், கீரை கூட்டு, கீரை சமையல், மருத்துவக் குறிப்பு கீரை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரல ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர் ''அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அம ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அமைச்சர்களுடன் பார்த்த பிரதமர் மோடி குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ...

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடி ...

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடிகள் – மோடி பேச்சு 'டிஜிட்டல்' மோசடிகள், 'சைபர்' குற்றங்கள், ஏ.ஐ., தொழில்நுட்பங்களால் அரங்கேறும், ...

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினம் ​1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர்1ஆம் தேதிஅனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரல ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் -ஜிதேந்திர சிங் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் பொறுப்பு வாங்க தேசத்துக்கு உள்ளது – ஜெய் சங்கர் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...