பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியாவும், அங்கோலாவும் உறுதி பூண்டுள்ளன” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

அங்கோலா அதிபர் ஜோவோ மானுவல் கோன்கால்வ்ஸ் லோரென்கோ, 3 நாள் பயணமாக இன்று (மே 03) டில்லி வந்தடைந்தார். ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த அங்கோலா அதிபர் ஜோவோ மானுவலுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் அங்கோலா அதிபர் சந்திப்பு நடத்தினார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பிரதமர் மோடி மற்றும் அங்கோலா அதிபர் ஜோவோ மானுவல் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இந்தியா மற்றும் அங்கோலா ஆகிய இரு நாடுகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியாவும், அங்கோலாவும் உறுதி பூண்டுள்ளன. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தில் அங்கோலா அளித்த ஆதரவிற்கு நன்றி. இந்தியாவிற்கும் அங்கோலாவிற்கும் இடையிலான உறவு நீண்ட காலமானது. இந்தியாவும், அங்கோலாவும் தங்கள் ராஜதந்திர கூட்டாண்மையின் 40வது ஆண்டு நிறைவு செய்துள்ளது. எங்கள் உறவு மிகவும் பழமையானது. அங்கோலா தனது சுதந்திரத்திற்காகப் போராடியபோது, ​​இந்தியா அவர்களுக்கு ஆதரவாக நின்றது.

கடந்த 10 ஆண்டுகளில், ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவு அதிகரித்துள்ளது. வர்த்தகம் கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்களை ( ஒரு பில்லியன் என்பது 100 கோடி) எட்டியுள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பை நாங்கள் மேம்படுத்தியுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில், ஆப்பிரிக்காவில் 17 புதிய தூதரகங்களைத் திறந்துள்ளோம்.

மானியங்கள்ஆப்பிரிக்காவிற்கு 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் வசதிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளுக்கு 700 மில்லியன் டாலர் மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் 8 நாடுகளில் தொழில் பயிற்சி மையங்களைத் திறந்துள்ளோம். ஐந்து நாடுகளில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நாங்கள் உதவுகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...