வசம்பு என்னும் அறிய மருந்து

 சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் பொருளாகும். அதிலும் குறிப்பாக 'பச்சைப்பிள்ளைகள்' இருக்கும் வீட்டில் ஐந்தரைப் பெட்டியில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கிய மருந்துப் பொருளாகும்.

பச்சைப் பிள்ளைகள் திடீர் திடீரென்று அழும். வயிற்று வலியாக இருந்தாலும் அழும். வாயுப் பொருமலினாலும் அழும், உடனே இந்த வசம்பை ஆமணக்கெண்ணையில் முக்கிச் சுட்டுக் கரியாக்கிப் பொடித்து வெந்நீரில் கலந்து கொடுத்தால் போதும், குணம் கிடைக்கும்.

சரியாகச் ஜீரணமாகாமல் குழந்தை வாந்தி எடுத்தாலோ, மாந்தத்தினால் வயிறு உப்பி இருந்தாலோ என்னவென்று கூற முடியாத பச்சைக் குழந்தைகள் விட்டுவிட்டு அழுதாலோ வசம்பை மருந்தாகக் கொடுத்தால் போதும். அழுகையை நிறுத்தி விடும்.

புத்தம் புதிய தேனிலும் கலந்து கொடுக்கலாம். இவ்விதம் தொடர்ந்து கொடுத்து வர விக்கல், மூச்சுத் திணறல், இருமல், மற்றும் வயிற்றுக் கோளாறுகள் இவை குணமாகும்.

பேதியைக் கட்டுப்படுத்தவும் வசம்பு நல்ல மருந்தாகும். குழந்தைகள் உள்ள வீட்டில் எப்போதும் வசம்பு இருக்க வேண்டும். மண்சட்டியில், வசம்பை இடித்துத் தூளாக்கி அதிலிட்டுப் போதிய அளவு நீர்விட்டு அவ்விதமே மூடி வைத்துவிட வேண்டும். இரவு முழுவதும் நன்றாக ஊறி இருக்கும் காலை வேளையில் இந்த நீரை வடித்துக் கொடுக்க பேதியை நிறுத்திவிடலாம்.

குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கு வசம்பு நல்ல மருந்தாகிறது. நரம்புத்தளர்ச்சியால் அவதிப்படுபவர்களுக்கும் இது நல்ல மருந்தாகும். வசம்பை இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு ஓர் தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து தினமும் குடித்து வர ஒருவாரத்தில் குணம் கிடைக்கும். எனவே, நரம்புத்தளற்ச்சியால் துன்பமடைபவர்கள் நம்பிக்கையுடன் இந்த மூலிகையைக் கையாண்டால் போதும் குணம் கிடைக்கும்.

வசம்பு, கறிமஞ்சள், ஏலரிசி இவை ஒவ்வொன்றையும் 15 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவைகள் அனைத்தையும் ஓரிரவு முழுவதும் நன்கு ஊற வைக்க வேண்டும்.

பின்னர் மறுநாள் காலையில் அம்மியில் வைத்துப் போதிய தேங்காய்ப்பால் விட்டு நன்கு அரைக்க வேண்டும்.

அதன்பின்னர் இந்த விழுதை ஏறக்குறைய அரை லிட்டர் அளவு தேங்காய் எண்ணையில் கலந்து சிறு தீ எரித்துப் பக்குவமாமக் காய்ச்சி எடுக்க வேண்டும். எண்ணெய் முருகிவிடக்கூடாது.

இந்தத் தைலத்தைச் சொறி, சிரங்கு, மற்றும் படும்புண்களின் மீது கோழி இறகால் தொட்டுப் போடக் குணம் கிடைக்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...