1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற போரில் கிடைத்த வெற்றியை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி குற்றஞ்சாட்டியுள்ளார்
தனது வலைதளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது ;
1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான போரில் இந்தியாவுக்கு
கிடைத்த வெற்றியின்-பலனை காங்கிரஸ்கட்சி சரியாக பயன்படுத்த தவறிவிட்டது. இதன்காரணமாக எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் மற்றும் மதத்தின் பெயரிலான-பயங்கரவாதத்தை பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது.
இந்தியாவில் 561 சமஸ்தானங்களை-ஒன்றிணைத்து சிதறுண்டு கிடந்த இந்தியாவை வலிமைமிக்கதாக சர்தார் வல்லப பாய்பட்டேல் மாற்றினார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, காஷ்மீர்-பிரச்ûனையில் ஜவாஹர்லால் நேருவின் தீர்வு முயற்சி தோல்வியை தழுவியது. இதற்கான-தீயபலனை இந்தியா இன்று அனுபவித்து-வருகிறது.
காஷ்மீருக்கு சிறப்புஅதிகாரம் வழங்கும் 370பிரிவு, தற்காலிகமானது தான் என நேரு கூறியபோதும், இன்னும் அது ரத்து செய்ய படவில்லை. எனவே இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான்-சக்திகளின் உதவியுடன் பிரிவினைவாதிகள் காஷ்மீரில் தலை எடுத்துள்ளனர். காஷ்மீர், இந்தியாவின் ஒருபகுதியல்ல என்று அவர்கள் விஷமபிரசாரம் செய்து வருகின்றனர்.
நேரு தலைமையிலான மத்திய-அரசோ, ஷேக் அப்துல்லா-தலைமையிலான காஷ்மீர் அரசோ, காஷ்மீர் முழுமையாக இந்திய-யூனியனுடன் இணைக்கபடவேண்டும் என எப்போதும் நம்பியதில்லை என்று தெரிவித்துள்ளார்
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.