இர தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஷேக் ஹசீனா மோடிக்கு அழைப்பு

இந்தியா – வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என்று ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேற்று  (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இரு நாடுகளின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நரேந்திர மோடி – ஷேக் ஹசீனா முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் செய்தியாளர்கள் முன்னிலையில் உரையாற்றினர். அப்போது பேசிய ஷேக் ஹசீனா, “வங்கதேசத்தின் 12வது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஜனவரியில் நடந்து முடிந்து எங்களது புதிய அரசு அமைந்த பிறகு நான் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். இந்தியா எங்களுக்கு முக்கிய அண்டை நாடு, நம்பகமான நட்பு நாடு மற்றும் பிராந்திய பங்குதாரர்.

1971ம் ஆண்டு எங்கள் விடுதலைப் போரின் போது பிறந்தது இந்தியாவுடனான எங்கள் உறவு. இந்தியா உடனான உறவின் உண்ணதத்தை வங்கதேசம் பெரிதும் மதிக்கிறது. 1971ம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரில் உயிர் தியாகம் செய்த இந்திய மாவீரர்களுக்கு நான் வீரவணக்கம் செலுத்துகின்றேன். நமது இரு நாடுகளின் நட்புறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா மதிப்பு மிக்க நாடு முகம ...

இந்தியா மதிப்பு மிக்க நாடு முகமது முயிசு கருத்து  'எங்களுக்கு இந்தியா மதிப்புமிக்க பங்குதாரர் மற்றும் நண்பர்கள் என ...

பிரதமர் மோடியின் நவராத்திரி வி ...

பிரதமர் மோடியின் நவராத்திரி விரதம் பிரதமர் நரேந்திர மோடி தனது சிறுவயது முதலே நவராத்திரி ...

ஹரியானா தேர்தலில் மக்களுக்கு ப ...

ஹரியானா தேர்தலில் மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் ஹரியானா தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் அதிகம் பேர் ...

மஹாராஷ்டிராவில் ரூ 50,000 கோடி திட் ...

மஹாராஷ்டிராவில் ரூ 50,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் மஹாராஷ்டிராவின் வாஷிம், மும்பை மற்றும் தானேயில் ரூ.50 ஆயிரம் ...

3-வது கௌடில்யா மாநாட்டில் பிரதம ...

3-வது கௌடில்யா மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரை புதுதில்லியில் இன்று (04.10.2024) நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் ...

இளைஞர்களை இருண்ட உலகத்திற்கு க ...

இளைஞர்களை இருண்ட உலகத்திற்கு காங்கிரஸ் அழைக்கிறது -அமித்ஷா குற்றம் சாடியுள்ளார் இளைஞர்களை போதைப்பொருட்களின் இருண்ட உலகத்திற்கு காங்கிரஸ் அழைத்து செல்ல ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...