ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல அரைத்து கொட்டைப் பாக்களவு மருந்தை, அரை டம்ளர் பசுவின் பாலில் போட்டுக் கலக்கி குடித்து விட வேண்டும். இவ்வாறு காலை, மாலையாக மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், (வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், வயிற்றில் இரைச்சல், சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு) வயிற்றுக் கோளாறு யாவும் குணமாகும்.
ஆலமரத்திலுள்ள இளந்தளிர்களைக் கொண்டு வந்து அம்மியில் வைத்து அரைத்து, கொட்டைப்பாக்களவு எடுத்து வாயில் போட்டுச் சிறிதளவு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி நின்றுவிடும்.
ஆலமரத்தின் பழங்களைக் கொண்டுவந்து சுத்தம் செய்து அம்மியில் மைபோல அரைத்து கொட்டைபாக்களவு மருந்தை ஒரு டம்ளர் பசுவின் பாலில் போட்டுக் கலக்கி, இரவு படுக்கும் முன் குடித்துவிட்டுப் படுத்தால் மறுநாள் காலையில் மலச்சிக்கல் சரியாகி விடும்.
ஆலமரத்தின் பழத்தைக் கொண்டுவந்து அதே அளவு ஆலவிழுதின் நுனியிலுள்ள பகுதியையும் சேரத்து மைபோல அரைத்து, கொட்டைபாக்களவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து காலையில் மட்டும் சாப்பிட வேண்டும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது படிப்படியா இறுகும். உடல் பலப்படும். இடையில் நிறுத்தி விட்டால் எந்த விதமான பலனையும் காண முடியாது.
ஆண் மலடு, பெண் மலடு என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கூட ஆணும், பெண்ணும் இதே மாதிரித் தொடர்ந்து சாப்பிட்டு உடல் உறவு கொண்டால் நிச்சயமாகக் கரு உற்பத்தியாகும். மருந்து சாப்பிடும் 40 நாட்கள் வரை உடலுறவு கொள்ளக்கூடாது.
ஆலமரத்தின் அடிபாகத்திலுள்ள சுரசுரப்பான பாகத்தை வெட்டுக் கத்தியினால் சுரண்டி எடுத்துவிட்டு, உள்ளேயிருக்கும் பட்டையைத் தேவையான அளவு வெட்டிக் கொண்டு வர வேண்டும். இதேபோல ஆழ மரத்தின் வேர்ப்பட்டையையும் வெட்டிக் கொண்டு வரவேண்டும். வகைக்கு 1௦௦ கிராம் எடுத்து அம்மியில் வைத்து நைத்து ஒரு புதிய மண்கலத்தில் போட்டு, ஒரு டம்ளர் அளவு தண்ணீரை விட்டு நன்றாகக் கலக்கி மூடி ஓர் இடத்தில பாதுகாப்பாக வைத்து விட வேண்டும், மறுநாள் காலையில் இந்த நீரை மட்டும் இறுத்தி வெறும் வயிற்றில் குடித்துவிட வேண்டும். உடனே ஒரு டம்ளர் அளவு தண்ணீரை மருந்தில் விட்டு மூடி பழைய இடத்தில வைத்துவிட வேண்டும். இதேபோல மூன்று நாட்களுக்கு ஒரு முறை, பட்டை மாற்றித் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட வேண்டும்.
சிலருக்கு 40 நாட்களில் பாதியளவு சர்க்கரையே குறைந்திருக்கும். மேலும் பாதியளவு குறைய மேலும் நாற்பது நாட்கள் சாப்பிட்டால் நீரிழிவு அறவே குணமாகும். இது ஒரு கைகண்ட மருந்தாகும். மூன்று நாட்களுக்கு மேல் கண்டிப்பாக பட்டையை மாற்றி விட வேண்டும்.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.