"பாகிஸ்தானுடன் நல்லுறவை பேணவே விரும்புகிறோம். அதே நேரத்தில் நமது கண்ணியம் மற்றும் சுய மரியாதையை விட்டுக்கொடுத்து அதை சாதிக்க விரும்பவில்லை' என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மக்களவையில் புதன் கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலை அரசு கையாண்டவிதம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விமர்சித்தனர். அதைத்தொடர்ந்து, இந்த விவாதத்துக்குப் பதிலளித்து பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியதாவது:
அனைத்து அண்டை நாடு களுடனும் நல்லுறவை பேணவே நாம் விரும்புகிறோம். பாகிஸ்தானுடனும் அதையே விரும்புகிறோம். அதே சமயம், நம் நாட்டின் கண்ணியத்தையும் சுய மரியாதையையும் விட்டுக்கொடுத்து அதை சாதிக்க நாம் விரும்பவில்லை.
பாகிஸ்தானில் உள்ள சில அமைப்புகள் சிலகருத்துகளை வெளியிட்டு வருகின்றன. அவற்றுக்கு பாடம் புகட்டப்படும்.
இப்போது நாம் பாதிக்கப் படுவதற்கு கடந்தகாலங்களில் செய்துகொண்ட சமரசங்களும் ஒரு காரணமாகும். அப்படிப்பட்ட பல்வேறு சம்பவங்களை நான் பார்த்துள்ளேன். அரசியல் இலக்குகளை எட்டும்நோக்கில் ராணுவ உளவு நடவடிக்கைகள் பலிகொடுக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளை என்னால் கூறமுடியும் (முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை மறைமுகமாக விமர்சித்தார்).
சிறிய பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை எதிர்கொள்வதும் போரைப்போலவே நடத்தப்பட வேண்டும். அதனால்தான் பதான்கோட் தாக்குதலை எதிர்கொள்ள என்எஸ்ஜி வீரர்கள் களமிறக்கப் பட்டனர். நமது பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிலகுறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். மேலும், பாதுகாப்புப் படைத்தளங்கள் அனைத்தின் பாதுகாப்பையும் நாம் மறு ஆய்வு செய்துள்ளோம் என்றார் அவர்.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.