'குழப்பமான மன நிலையில் மக்கள் நலக் கூட்டணி உள்ளது. அதிலிருந்து வைகோ வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை,''
2006ல் திமுக., அதிமுக., வரக்கூடாது என நினைத்தவர்கள் தேமுதிக.,விற்கு ஓட்டளித்தனர். ஆனால் 2011 தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க.,வே கூட்டணிவைத்தது. எனவே தற்போது தி.மு.க., அ.தி.மு.க.,விற்கு மாற்றாக பா.ஜ., விளங்குகிறது.மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அரசியலில் துாய்மையானவர் போலபேசுகிறார். திமுக., விஞ்ஞான ரீதியாக ஊழல்செய்ததாக சர்க்காரியா கமிஷன் குற்றம்சாட்டியது. அப்போது தி.மு.க.,விலிருந்த வைகோ என்னசெய்தார்? அதற்கு பிறகும் தி.மு.க., சார்பில் மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டாரே?
1992ல் ஸ்டாலினுடன் ஏற்பட்ட பதவிசண்டையில் தானே தி.மு.க.,விலிருந்து வெளியேறினார். தி.மு.க., -அ.தி.மு.க., ஊழல் குறித்துபேசும் கம்யூனிஸ்ட்கள் அந்த கட்சிகளுடன் தானே மாறி மாறி கூட்டணி வைத்து வந்தன.
மக்கள் நலக்கூட்டணி குழப்பமான மனநிலையில் இருக்கிறது. ஏப்., 20க்குள்ளாக மக்கள் நலக் கூட்டணிலிருந்து வைகோ வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
மத்தியிலுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஜன் தன் யோஜனா, முத்ரா வங்கி என வறுமைகோட்டிற்கு கீழுள்ளவர்களுக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.
விவசாய உற்பத்தியைபெருக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசியில் ஒரு கிலோவிற்கு மத்திய அரசு ரூ.22 வரை மானியம்வழங்கியது. மாநில அரசு ரூ.3 மட்டும் மானியம் வழங்குகிறது. மத்தியிலுள்ள நல்லாட்சி மாநிலத்திலும் அமைவது அவசியம்.
அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்குவரும் என்ற கருத்து கணிப்பு கருத்து திணிப்பாகும். கடந்த லோக் சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி 230 தொகுதிகளில் வெற்றிபெறும் என கருத்து கணிப்புகள் கூறின. பா.ஜ., 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றது. இது மக்கள் கவனத்தை திசைதிருப்பும் முயற்சி.தே.மு.தி.க., தானாக கரைகிறதா அல்லது தி.மு.க.வினால் கரைக்கப்படுகிறதா என தெரியவில்லை.
முதல்வரை மத்தியமைச்சர் பியூஷ் கோயல் சந்திக்க முறையான அனுமதிகேட்டும் கிடைக்கவில்லை என்றுதான் குற்றம் சாட்டினார். ஆனால் பொத்தாம்பொதுவாக முதல்வரை யாரும் சந்திக்கலாம் என அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியிருப்பது உண்மையை மறைக்கும் முயற்சி,
நன்றி பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.