பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை அவதாரங்களில் பேரெழிலும், குணங்களிலும் ஈடுபட்டு மனத்தைப் பரமனிடம் பரி கொடுப்பது பக்தி யோகம். பலன் கருதாது, அறச் செயல்களில் ஈடுபட்டுச் செயல்களின் பலன்களை இறைவனுக்கே அர்ப்பணித்து மனதின் விகாரங்களை நீக்கிக் கொண்டு, மனதை ஆண்டவன் பால் ஈடுபடுத்துவது கர்மயோகம்.
நிலையற்ற வாழ்வு, இறைவன், ஆன்மா என்ற மூன்றின் உண்மையை உணர்ந்து, அவ்வறிவின் திறனால் மனத்தின் அஞ்ஞானத்தை ஒழித்து, ஒளியை உணர்ந்து மனதை அதில் ஒன்றச் செய்வது ஞான யோகம். பிராணாயாமம், ஆசனங்கள் முதலியவற்றால் உடலை வருத்தி, உயிரை உணர்ந்து, மனத்தைக் கட்டுப்படுத்தி, மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை, ஆறு சக்கரங்களின் வழியாக மேல் நோக்கி இயங்கச் செய்வது துரியம் எனப்படும். ஸஹஸ்ராரத்தில் கலந்திருக்கச் செய்வது ஹடயோகம்.
ஆசன சித்தி பெற்று, ஏதேனும் ஒரு மந்திரத்தை ஜெபம் செய்வதால், மனதை அம்மந்திரப் பொருளில் ஈடுபட்டிருக்கச் செய்து, இறையருளைப் பெறுவது மந்திர யோகம்.
இனிப்புப் பொருட்கள் பலவாயினும், அவற்றைச் செய்யப் பயன்படும் பொருள்கள் யாவும் சர்க்கரையும் போல, மனத்தூய்மையும், தியானமும் யோக முறைகள் எல்லாவற்றிற்கும் இன்றியமையாதவையாகும்.
நன்றி : பானுகுமார்
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.