பட்டினிச் சிகிச்சை

 இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் கொண்டுள்ள ஆயுதம்தான் பட்டினிச் சிகிச்சை.

உடலில் அமிலச் சேர்க்கையும், நச்சுக்கழிவு கூடுதலுமே நோயாகிறது. இந்த வேண்டாத அந்நியத்தன்மையுள்ள பொருட்களை, உடல் வெளியேற்ற எடுக்கும் இயற்கையான முயற்சிகள்தான் நோய் அறிகுறிகள்.

இந்த அமில நச்சுக் கழிவுகள் உடலில் கூடுதலாகிவிடும்போது, உடல் இயற்கை கடுமையாகச் செயல்பட்டு அதனை வெளியேற்றுகிறது. உடல் இந்தச் செயலுக்கே அதிக முக்கியத்துவம் தந்து தீவிர கவனத்துடன் இயங்கும். இந்த நிலையில் உடல், மேலும் உணவை விரும்புவதில்லை என்பதே உண்மை.

உண்ணாவிடில் சக்தி கிடைக்காது என்பது இந்தச் சூழ்நிலையில் தவறு. இதனாலே அப்போது வாயில் லேசான கசப்புணர்வு அல்லது குமட்டலுடன் பசியும் எடுக்காது. மீறி உணவைத் திணித்தல், செரிமான வேலைகளுக்கு உடலின் சக்தி திரும்ப வேண்டியிருக்கும். இதனால் நோயை குணமாக்க, கழிவுகளை வெளியேற்ற வேண்டிய உடலின் செயல்பாடு பங்கப்பட்டு, கழிவுகள் தேங்கும்.

உடலின் நோய் தீவிரமாகிவிடும். உடலுக்கு உதவுவதுபோய், நாமே உடலின் நோய் நீக்கச் செயலுக்கு எதிராகிறோம்.

முன்னெல்லாம் நமது நாட்டில் பட்டினி என்பது அதிகமும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு புனிதச் செயலாகக்கூட கருதப்பட்டு வந்தது. இப்போது பட்டினி என்பது சிரமமான செயலாக மக்கள் கருதி வருகிறார்கள்.

பொதுவாகவே காய்ச்சலில் விழுந்தவர், தனக்கு வாய் எப்படியோ இருக்கிறது. சாப்பிட எதுவும் வேண்டாம் என்றுதான் சொல்வார். ஆனால் கூட இருப்பவர்கள் 'சாப்பிடாமல் கிடந்தால் எப்படி? காய்ச்சல் எப்படி குணமாகும்? உடம்புக்கு சக்தி வேண்டாமா, கொஞ்சமாவது சாப்பிடு' என்று வற்புறுத்துவார்கள்.

வற்புறுத்தல் தொல்லை தாங்காமல் கொஞ்சமாக கஷ்டப்பட்டு விழுங்கி வைப்பார் காய்ச்சல் நோயாளி. ஆனால் உள்ளே சென்ற உணவு செரிமானத்திற்குத் திணறும். இதனாலும் காய்ச்சல் தீவிரப்படும் அல்லது நோய் முற்றும். மனிதன் மட்டும்தான் நோய்வாய்ப்பட்டபோதும், பசியில்லாமளிருக்கும் போதும் கூட உண்ணுகிற உயிர் ஜீவன்.

சில மனிதர்கள் ஒருவேளை உணவைக்கூட உண்ணாமல் விடமாட்டார்கள். ஒருவேளை உண்ணாவிடில் அஞ்சுவார்கள். இது மிகவும் வேடிக்கையானது. டாக்டர் தீவேயின் கூற்றைப் பாருங்கள்: நோயுள்ள போது உண்டால் அது நோயையே வளர்க்கும், நோயாளியை அல்ல!

பட்டினியை ஒரு சிகிச்சையாக மேற்கொள்ளும் முன், சில எளிய உண்மைகளையும், திட்டங்களையும் அறிந்து செயல்படுதல் நல்லது. அடிக்கடியும் எப்போதாவதும் ஒருவேளைப் பட்டினியை உண்ணாது வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள், நோயுற்ற காலத்தில் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் முழுப்பட்டினி இருத்தல் வெகு எளிது.

இவர்களுக்குப் பின்னாளில் ஆறுநாள் ஏழு நாட்கள் வரை முழுப்பட்டினியும் சுலபத்தில் கைவரப் பெரும்.

இன்புளுயன்சா, காய்ச்சல், சளி, இருமல் போன்ற கோளாறுகள் இரண்டு மூன்று நாட்கள் 'பட்டினி' யிலேயே குனமாகிவிடக் கூடியவை. நீடித்த நோய்களுக்குப் பட்டினி கடக்கும்போது, நீண்ட நாட்கள் பட்டினிச் சிகிச்சை மேற்கொள்ளும்போது, இயற்கை மருத்துவ சிகிச்சையின் சில வழிமுறைகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

பட்டினிச் சிகிச்சை ஆரம்பிக்கும் முன்பு, திரவ வடிவில் உணவையும், சமைக்காத உணவையும் மூன்று நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். இது ரத்தத்தை சுத்திகரிக்க உதவும். பச்சையான உணவிலிருந்து பெறப்படும் வைட்டமின்களும், மினரல்களும் ஒன்றுசேர்ந்து, பின் நாட்களில் பட்டியின்போது உடலுக்கு உபயோகமாக இருக்கும்.

நீடித்த நோய்களுக்கான பட்டினிச் சிகிச்சைக்கு முன்னரே வரையறுக்கப்பட்ட காலக்கெடு கிடையாது என்பதால், இவர்கள் முறையான இயற்கை மருத்துவர் ஒருவரின் மேற்பார்வையில் பட்டினிச் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

அடிக்கடி ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது. சிறுநீரில் 'கீடோன்களும் ' ரத்தத்தில் 'யூரியா' அளவும் கூடியிருந்தால் பட்டினியை உடனடியாகக் கைவிட வேண்டும்.
மேலும், பட்டினியைக் கைவிடும்போதும் முறையாகச் செயல்பட வேண்டும் என்பது பட்டினி கிடப்பதினும் முக்கியமானது.

செரிமான உறுப்புகள் தளர்ந்து ஓய்வாக இருக்கும் பட்டினிச் சிகிச்சை காலத்தில் திடீநேனப் பட்டினியைக் கைவிட்டு, அதிகப்படியான பல்வேறு உணவு வகைகளை அதிரடியாக உட்கொண்டால், செரிமான உறுப்புகள் திடீரெனத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது சிரமம்.

செரிமானக் கோளாறுகள் தோன்றி, மீண்டும் கழிவு சேர்ந்து இதுவுமே நோய்களுக்கு ஏதுவாகும். பட்டியையை நிறுத்தியவுடன், அடுத்த நாள் காலை பழரசம் மட்டுமே குடிக்க வேண்டும். பகலில் பழங்கள். மாலையில் சப்பாத்தி ஒன்றுடன் வேகவைத்த காய்கறிகள். மூன்றாவது நாளே வழக்கமான உணவை கொஞ்சமாக உட்கொள்ள வேண்டும்.

இரண்டு நாட்கள் பட்டினி என்றால், மூன்றாவது நாள் வெறும் பழரசங்கள், நான்காவது நாள் காலை பழரசம், மதியம் பழங்கள் மட்டும், இரவில் சப்பாத்தி – வெந்த காய்கறிகள் என்று உண்ண வேண்டும். ஐந்தாவது நாள்தான் வழக்கமான உணவு.

நன்றி : நோய்களும் இயற்கை மருத்துவமும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...