ஊழல் கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்தது போதும், ஒரு வாய்ப்பு தாருங்கள் முன்னேற்றப்பாதையை தருகிறோம்

 தமிழகத்தில் ஊழல் உச்சகட்டத்தை எட்டிவிட்டது. வரும் மே 16-ம் தேதி நடை பெற உள்ள தேர்தலில், நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் முதல்வரை தேர்வுசெய்வதற்கானது என்பதை மனதில் கொள்ள வேண்டும். கடந்த 50 ஆண்டுகளில் அதிமுக, திமுக என மாறிமாறி இரண்டு கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுத்தும எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதிமுக அரசு தற்போது ஊழலின் உச்ச கட்டத்துக்கு சென்று விட்டது. ஊழல் செய்யும் மாநிலங்களில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் எந்த திட்டமாக இருந்தாலும், அதற்கான பணிகளுக்கு முறைப்படி டெண்டர் வழங்கு வதில்லை. யார் அதிகமாக லஞ்சம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. அதேபோல தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திமுக- காங்கிரஸ் கூட்டணியும் ஊழல் கூட்டணி.

இந்தியாவில், 14 மாநிலங்களில் பாஜக ஆட்சிசெய்கிறது. இது தவிர மத்தியில் 2 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறது. ஆனால், இதுவரை யார்மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை. கிராமங்கள், ஏழை எளியமக்களின் முன்னேற்றங்களுக்கான திட்டங்களை முழுவீச்சில் செயல் படுத்தி வருகிறது. ஆனால், இந்த திட்டங்களைக் கூட தமிழகத்தின் கடைக்கோடி மக்களிடம் கொண்டுசெல்ல அதிமுக அரசு தடையாக உள்ளது. இதேபோல எல்இடி விளக்குகளுக்கான உதய்திட்டம், காப்பீட்டு திட்டம் போன்றவையும் மாநில அரசின் ஒத்துழைப்பின்மையால் முடங்கி கிடக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்த விரும்புகிறது. அதற்கேற்ற மாநில அரசு தற்போது தேவைப் படுகிறது.

ஒரு கிலோ அரிசிக்கு மத்திய அரசு ரூ.28 மானியம் தருகிறது. மாநில அரசு ரூ.1 கொடுத்து அம்மா அரிசி என கூறுகிறது. தமிழகத்தில் வெள்ளம் வந்தபோது மத்திய அரசு ரூ.2000 கோடியை அளித்தது. அந்தபணத்தை இங்கு குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரமாக பிரித்து கொடுத்து அம்மாவின் பரிசு என்றார்கள். அதேபோல, நாடுமுழுவதும் பெட்ரோல், டீசலில் எத்தனால் கலந்துகொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் கரும்பு உற்பத்தி யாளர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும். ஆனால், தமிழகத்தில் எத்தனால் உற்பத்திக்கு அதிமுக அரசு அனுமதி மறுக்கிறது. ஆனால், இதன் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய சாராயத்துக்கு தாராளமாக அனுமதி அளிக்கிறது.

அதிமுக, திமுக என இரண்டு ஊழல் கட்சிகளுக்கு மாறிமாறி வாக்களித்தது போதும். இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட் டணிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்துங்கள். நாங்கள் தமிழகத்தை முன்னேற்றப் பாதை யில் அழைத்துச் செல்கிறோம்.

திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைப்பெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசியது 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...