உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள அழுக்கை அகற்றும் சக்தி உடையது. இரத்தத்தில் உள்ள சூட்டைக் குறைக்கும் தன்மையுள்ளது.
இனிப்புச் சுவைக்கு நட்பாக புளிப்பு இருக்கிறது. அதிகமான புளிப்பினால் வயிறு வாதக் காற்றுடன் பெருத்துக் காணப்படும். ஆனால் அப்போது தோள்கள் மற்றும் பாதங்கள் சிறுத்துக் காணப்படும்.
புளிப்பு அளவுக்கு அதிகமாகும்போது, மலச்சிக்கல் உண்டாகிறது. மற்றும் மந்தத் தன்மையுடன் நோய்க்குக் காரணமாகிறது. உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்பும், கொழுப்புக்கு நட்பான புளிப்பும், திமிருக்குக் காரணமாகும். அத்துடன் காரம் அளவுக்கு அதிகமாகும்போது, அந்தளவு கோபத்தை உண்டாக்குகிறது.
நன்றாகப் பசியெடுத்த பிறகே அளவுடன் உண்ணும் வழக்கம் உள்ளவர்க்குப் புளிப்புச் சுவை உடலில் அதிகமாகாது. தினமும் குறித்த நேர்த்தில் உணவு வேண்டும் என்பது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று.
மலச்சிக்கல் ஏற்படுவதால் அம்மலத்தின் மனம் உடல் முழுவதும் பரவுகிறது. அப்படிப் பருவுவதை வாயில் துர்நாற்றம், அதிக ஊத்தை இருப்பதனால் உணரலாம்.
வாத நோயால் அடிக்கடி வருந்துபவர், கிழங்கு உணவுகள், எண்ணெய்ப் பொருள்கள் முற்றிலும் நீக்கி, புளிப்பு உணவுகளை மிகவும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். அரிசியினால் ஆன உணவை மிகவும் குறைத்து அவற்றிற்குப் பதிலாக கோதுமை உணவைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
நிலத்திற்குக் கீழ் விளையும் விளைபொருள்கள் தன்மையில் வேறுபட்டவை என்றாலும், வெங்காயம், பூண்டு, இஞ்சி, முள்ளங்கி, கருணைக்கிழங்கு ஆகியவற்றை மட்டும் அளவுடன் பயன்படுத்தலாம்.
எலுமிச்சம்பழம், புளி, கிச்சளிப்பழம், நாரத்தங்காய், புளியங்காய், புளியங்கொழுந்து, மாங்காய் பிஞ்சி, சீமைக்களாக்காய், புளிச்சக் கீரை, கொத்தவரைக்காய், வெண்டைக்காய், காராமணிக்காய், அவரைக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, உலர்ந்த காராமணி, உலர்ந்த பட்டாணி, உலர்ந்த மொச்சை, வெண்ணெய் போன்றவற்றில் புளிப்புச் சுவை உள்ளது.
நன்றி : வேலூர் மா.குணசேகரன்
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.