பிரதமர் நரேந்திரமோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி

மெட்ரோரயில் திட்டவிரிவாக்கத்துக்கு அனுமதி அளித்துள்ளதற்கு பிரதமர் நரேந்திரமோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

மெட்ரோ ரயில் விரிவாக்கத்திட்டத்துக்கான அதிமுகவின் கோரிக்கையை ஏற்று, அனுமதி அளித்ததாக பிரதமருக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், சென்னை மெட்ரோ ரயில் சேவையை 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 29-ம் தேதிதான் தொடங்கி வைத்ததை தாங்கள் அறிவீர்கள் என்று கூறியுள்ளார்.

2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தான் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டு, அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். ஆனால், 2011-ஆம் ஆண்டில், ஆட்சிப்பொறுப்பேற்ற அதிமுக மோனோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த போவதாகத்தான் கூறிவந்தது. பின்னர், அந்தத் திட்டம் நடைமுறைக்கு உகந்ததல்ல என்பதை உணர்ந்து மெட்ரோ ரயில் திட்டத்தை ஏற்றுக்கொண்டது என்பதுதான் உண்மை.

அதைவிடுத்து, மெட்ரோ ரெயில் சேவையை உருவாக்குவது என்றகருத்துரு, அதிமுக ஆட்சி காலத்திலேயே உருவானது என்பதைப் போல செயற்கையாக முதல்வர் ஜெயலலிதா பெருமை தேடிக்கொண்டிருக்கிறார்.

தற்போது பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்கான ஒப்புதல். திருவொற்றியூர் வரையிலான இந்தவிரிவாக்கமும், திமுக ஆட்சியில் கோரப்பட்டது தான்.

எனவே, திமுக விடுத்த கோரிக்கையின் பேரில் விரிவாக்க திட்டம் தொடர்பான முயற்சிக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்திருப் பதற்காக மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் சென்னை மாநகரமக்களின் சார்பில் நன்றி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...