140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி

‘140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பணிக்கிறேன்’ என பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், டொமினிகாவுக்கு 70,000 டோஸ் ஆஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உதவினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இந்தியா – டொமினிகா நல்லுறவை வலுப்படுத்த மோடி எடுத்து வரும் முயற்சியை அங்கீகரிக்கும் விதமாகவும், நாட்டின் மிக உயரிய தேசிய விருதான டொமினிகா கவுரவ விருது, இந்திய பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டது.

தனது 3 நாடுகளுக்கான பயணத்தின் இறுதி கட்டமாக, கயானாவிற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு நடந்து உச்சிமாநாட்டின் போது, டொமினிகாவின் ஜனாதிபதி சில்வானி பர்ட்டனா, பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருதான டொமினிகா கவுரவ விருது வழங்கி கவுரவித்தார்.

இந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

டொமினிகாவால் மிக உயர்ந்த தேசிய விருதை வழங்கியதற்காக பெருமைப்படுகிறேன். 140 கோடி மக்களுக்கு இதை அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

‘இந்த விருது, கோவிட் தொற்றுவின் போது டொமினிகாவிற்கு பிரதமர் மோடி செய்த உதவிகள், இந்தியா-டொமினிகா ஆகிய இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தவும், விருது வழங்கப்பட்டுள்ளது’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...