கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று அந்த நாட்டு பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, தீவிரம்அடைந்துள்ள ரஷ்யா – உக்ரைன் போரை குறிக்கும் விதமாக அவரது பேச்சு அமைந்தது.
பிரதமர் பேசியதாவது: ஆட்சி எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் நாங்கள் முன்னேறிச் சென்றது இல்லை. அது விண்வெளியாக இருந்தாலும் சரி, கடலாக இருந்தாலும் சரி, அது உலகளாவிய ஒத்துழைப்புடன் தொடர்புடையது.
சர்வதேச மோதலாக மாறக்கூடாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இந்த உலகைப் பொறுத்தவரை, இது மோதலுக்கான நேரமல்ல, மோதல்களை உருவாக்கும் நிலைமைகளை கண்டறிந்து அதை அகற்றுவதற்கான நேரம். மோதலில் ஈடுபடுவதைவிட அதை உருவாக்குபவர்களை கண்டறியும் நேரம் இது.
இந்த உலகில் எங்கு நெருக்கடி நிலவினாலும், முதல் ஆளாக குரல் கொடுப்பதுடன், அவர்களுக்கு உதவுவதே இந்தியாவின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |