பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அமைச்சரவையில் இன்று மிகப் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். பிரகாஷ் ஜவடேகர் கேபினட் அமைச்சராக புரமோஷன் கொடுக்கப் பட்டுள்ளார். மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அசாம்மாநில முதல்வராக பதவியேற்றுள்ளதால், அந்த பதவியிடத்திற்கு அதேமாநிலத்தை சேர்ந்த ராஜன் கோஹெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.
19 புதியமத்திய அமைச்சர்களில் 2 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந் துள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஜே. அக்பர் மத்திய அமைச்சராகி யுள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த அர்ஜூன்ராம் மெக்வால் மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த ஜிக ஜினாகி இணை அமைச்சராக பதவி யேற்றார். இவர் வடகர்நாடக பாஜகவின் முக்கிய பிரமுகராகும். மத்திய பிரதேசத்தைச்சேர்ந்த அனில் மாதவ் தவே மத்திய அமைச்சராக பதவியேற்றார். குஜராத்தை சேர்ந்த மன்சுக் எல்.மண்டாவியா, உ.பி.யை சேர்ந்த மகேந்திர நாத் பாண்டே, அனுப் பிரியா பட்டேல் ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். மகாராஷ்டிராவை சேர்ந்த ராம்தாஸ் அத்வாலே மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். டெல்லியைச்சேர்ந்த விஜய் கோயல் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார். குஜராத்தைச் சேர்ந்த புருஷோத்தம் ரூபாலா மத்திய இணையமைச் சராகியுள்ளார். கடவுள் மீது ஆணையிட்டு அனைவரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
VV