நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய வழிகள் நான்கு அவை,
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வைப் பெறுதல்
சரியான உணவுமுறைப் பழக்க வழக்கத்தை கடைபிடித்தல்
தேவையான உடற்பயிற்சிகளைத் தொடார்ந்து செய்தல்.
நோயுடையவர் உரிய மருத்துவம் பெறுதல்.
விழிப்புணர்வு
பொதுமக்கள் அனைவருக்கும் நீரிழிவுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நீரிழிவு குறித்த விழிப்புணர்வு என்றால், நீரிழிவுநோய் குறித்த அடிப்படைச் செய்திகளை அவர்கள் அறிந்து கொள்ளச் செய்வதே ஆகும்.
இந்நூல், நீரிழிவுநோய் குறித்த விழிப்புணர்வையும், நீரிழிவு நோயுள்ளவர்கள் பாதிப்புகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளையும், விரிவாக விளக்கிக் கூறுகிறது.
முதல் செய்தி
நீரிழிவுநோய் குறித்த விழிப்புணர்வில் முதல் செய்தி, இந்நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்வதே.
உடல் இயக்கம்
நம் உடலுக்கு நாள் தோறும் அனைத்துப் பணிகளையும் செய்யச் சக்தி தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவுப்பொருட்கள்தான் நமக்கு வேலைகளைச் செய்வதற்குரிய சக்தியைக் கொடுக்கின்றன. இந்த உணவுப்பொருட்கள் முதலில் நம் உடலில் சர்க்கரையாக (குளுகோஸ்) மாற்றப்படுகின்றன. அப்படிச் சர்க்கரையாக மாற்றப்பட்டவை,உடலின் பல்வேறு பாகங்களில் உள்ள செல்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன.
இன்சுலின்
சர்க்கரையாக மாற்றப்பட்ட உணவுப்பொருட்கள்,சக்தியாக மாற்றப்பட்டு உடலில் உள்ள செல்களுக்கும் செல்ல 'இன்சுலின்' என்னும் திரவம் நுழைவாயிலாகச் செயல்படுகிறது.
இன்சுலின் என்பது, நமது உடலிலுள்ள 'கணையம்' என்ற உறுப்பில் இருந்து சுரக்கும் ஒரு திரவம் (ஹார்மோன்) ஆகும். சர்க்கரை சக்தியாக மாற இன்சுலின் அவசியம் தேவைப்படுகிறது.
நீரிழிவு நோய்
உடலிலுள்ள செல்கள் எனப்படும் மிக நுண்ணிய பாகங்கள், நம் உடல் இயக்கத்திற்கும் துணை புரிகின்றன. இச்செல்களுக்குள் குளுகோஸ் சக்தியாக மாறி சென்று சேர வேண்டும்.
இன்சுலின் போதுமான அளவில் கணையத்திலிருந்து சுரக்காவிட்டாலோ, சுரந்த இன்சுலின் செயலிழந்து இருந்தாலோ சர்க்கரை இரத்தத்தில் அப்படியே நின்று விடுகிறது.
இப்படி இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை சேருவதையே, நீரிழிவுநோய் அதாவது சர்க்கரை நோய் என்று குறிப்பிடுகிறோம்.
ஒருவரது உடலில்
இன்சுலின் சுரக்கவே இல்லை என்றாலும் (No Secretion)
இன்சுலின் சுரந்தாலும் – அது போதுமான அளவு இல்லை-(பற்றாக்குறை) என்றாலும் (In Adequate)
இன்சுலின் சுரந்தாலும் – அது சரியாக வேலை செய்யாமல் பயனற்றுப் போனாலும் (In Active)
அவருக்கு ஏற்படுகிற பாதிப்பைதான் நீரிழிவுநோய் என்கிறோம்.
இயற்கையின் விந்தை
இன்சுலின் இன்மை,இன்சுலின் பற்றாக்குறை, இன்சுலினின் செயலற்றத்தன்மை ஆகிய மூன்று காரணங்களில் ஏதோ ஒன்று, ஒருவருக்கு ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பது எதுவும் அறியப்படவில்லை. அது இயற்கையாக நடக்கிற ஒன்றாகவே அமைகிறது.
இயற்கையின் விந்தை
நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.