ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது வலி, காது குத்தல், காதில் இரணம், வாய் துர்நாற்றம், சீதபேதி, இரத்தபேதி, மலச்சிக்கல், மூலச் சூடும் மலக் குடலில் புண், ஆசன எரிச்சல், வெள்ளைப் போக்கு ஆகியவை குணமாகும்.
வாய்ப்புண், வயிற்றுப் புண் ஆற
உலர்த்திய ரோஜா இதழ்களை நீரில் போட்டுப் பாதியளவு சுண்டக் காய்ச்சி வடிகட்டியதுடன் வெல்லம் பால் சேர்த்து அருந்தி வர நாளடைவில் வாய்ப்புண், வயிற்றுப் புண் ஆறிவிடும்.
ரோஜா இதழ்கள், மொக்குகள் யாவையும் கொண்டு வந்து சுத்தம் பார்த்து இதில் தேன், டைமண்ட் கற்கண்டு சேர்த்து குல்கந்து தயார் செய்து சாப்பிட உஷ்ண சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.
சளி, மூக்கடைப்பு
சளி, மூக்கடைப்பு இவைகள் வரும் பட்சத்தில் ரோஜாப் பூ முகர்ந்தால் நாளடைவில் அடைப்பு நீங்கி நலமாகும்.
ரோஜா இதழ்களிலிருந்து சர்பத் தயாரிக்கிறார்கள். இந்த சர்பத் அருந்தி வர நாளடைவில் மலச்சிக்கல், மூலநோய், மூலச் சூடு, மலக்குடலில் காணும் பிணிகள் இவைகள் அனைத்தையும் நலமாக்குகிறது.
அஜீரணத்தை போக்க வெற்றிலை பாக்கு போடும்போது அத்துடன் ரோஜா இதழ்களை ஐந்து சேர்த்துப் போட வாயில் துர்நாற்றம் வீசுவது சரியாகும்.
கர்ப்பமாக உள்ள பெண்களுக்குச் சிறுநீர் தாராளமாகப் போகப் பயன்படுகிறது. மற்றும் வெள்ளைப் போக்கு நிவர்த்தியாகிறது.
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.