சியாச்சின் சாதனை வீரர்களுக்கு ஒரு சல்யூட்

தேசம் காக்க தன்னலமில்லா தியாகம்உலகின் மிக உயரமான சியாச்சின் போர்க்களத்தில், குலை நடுங்க வைக்கும் குளிரில், இயற்கையின் சீற்றத்தை சமாளித்து தேச பாதுகாப்புக்காக பணியாற்றும் நமது ராணுவ வீரர்களின் தியாகத்தை சுதந்திர தினத்தில் போற்றுவோம்.

இமாலயத்தில் கரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் சியாச்சின் பனிச் சிகரம் அமைந்துள்ளது. 1949ல் செய்து கொண்ட கராச்சி உடன்படிக்கை, 1972ல் ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தப்படி இந்தியா, பாக்., அரசுகள் சியாச்சின் பனிமலையில் 'என்.ஜெ. 9842' என்று அழைக்கப்படும் போர் நிறுத்த எல்லைக்கோட்டை வரையறுத்தன. இது சரியாக வகுக்கப்படவில்லை எனக் கூறி இருநாடுகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இந்தியா வெற்றி:

சியாச்சினில் பானே போஸ்ட் என்னும் போர் நிலை அதிகபட்சமாக 22 ஆயிரம் அடி உயரம் கொண்டது. இப்பகுதியை 1984ல் பாக்., ராணுவம் ஆக்கிரமித்தது. இதையறிந்த இந்திய ராணுவம், 'ஆப்பரேஷன் மேஹதுாத்' மூலம் பாக்., படைகளை விரட்டிஅடித்து, சியாச்சின் மலைத்தொடர் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அன்று முதல் அங்கு ராணுவ முகாமையும் இந்தியா அமைத்தது.

கடினமான பணி

சியாச்சின் உச்சியில் வீரர்கள் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன் மலை ஏறுதல், பனிச் சுவர்களை அகற்றுதல், பனியில் ஏற்படும் பள்ளங்களில் கடந்து செல்லுதல் போன்றவற்றில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் இங்குள்ள பருவ நிலைக்கு ஏற்ப பக்குவப்படுத்திக் கொள்ள முடியும். மருத்துவ சோதனையில் உயர் ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு வர வாய்ப்பு உள்ளவர்கள் நீக்கப்படுவர்.

3 மணி நேரம்

மண்ணெண்ணெய் தான் மிக முக்கியம். 'ஸ்டவ்' பயன்படுத்தி பனியை உருக்கி குடி தண்ணீர் தயார் செய்வர். துணி துவைக்க ஒரு பக்கெட் தண்ணீரை சூடாக்க மூன்று மணி நேரம் தேவைப்படும். மண்ணெண்ணெய்யை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பொருட்கள் எப்போது 'ஹெலிகாப்டர்' மூலம் கெண்டு வரப்படும் என தெரியாது.

வானிலை மோசமாக இருந்தால் உணவு உட்பட எந்த பொருளும் எளிதில் கிடைக்காது. காலை யில் மைனஸ் 25 டிகிரி இருக்கும். இரவில் மைனஸ் 55 டிகிரி என்றால், பனியின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

கயிறு இணைப்பு:

மருத்துவ அறிவுரைப்படி தினமும் குளிக்கக் கூடாது. மாதத்திற்கு ஒரு முறை சிலர் குளிப்பர். படுப்பதற்கு முறையான படுக்கை இருக்காது. பனியில் காணப்படும் பள்ளங்கள் தான் கழிப்பறை. திடீரென கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு பனிப்புயல் வீசினாலோ அல்லது பள்ளங்களில் விழுந்தாலோ தப்பிக்க ஏதுவாக,

ஒத்துழைக்க வேண்டும். வானிலை மோசமாக வீரர்கள் வெளியே செல்லும் போது ஒருவரை ஒருவர் கயிற்றால் இணைத்துக் கொள்வர்.

டாக்டர்கள் இருப்பர். ஆனாலும் பெரிய அளவில் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் வானிலை இருந்தால், 'ஹெலிகாப்டர்' தரையிறங்க முடியாது. சம்பந்தப்பட்டவரின் உயிரையும் காப்பாற்ற முடியாது.

பழம்… பந்து :

'ஹெலிகாப்டரில்' இருந்து உணவு போட்டதும் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த உணவு பனியில் சிக்கிக் கொண்டால் ஆப்பிள், ஆரஞ்ச் போன்றவை பனியில் உறைந்து கிரிக்கெட் பந்து போன்று கடினமானதாக மாறிவிடும்.

மன ரீதியில் பாதிப்பு

உடல்ரீதியாக இவ்வளவு கஷ்டம் என்றால், மனரீதியாக படும்துன்பங்கள் ஏராளம். குடும்பத்தை பிரிந்து, அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாததால் பெரும்பாலும் தனிமை வாட்டும். பலரும் பேசாமல் மவுனமாக இருப்பர்.

மலையில் சுற்றி திரியும் நாய்கள் தான் வீரர்களுக்கு நல்ல துணை. ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமிற்கு இதன் கழுத்தில் கடிதங்களை கட்டி விட்டு தகவல்களை பரிமாறிக் கொள்வர்.

சியாச்சின் உச்சியின் ராணுவ வீரர்கள் 90 நாட்களுக்கு பணியாற்ற வேண்டியிருக்கும். ஒரு பிரிவினர் பணி முடித்ததும், அடுத்த பிரிவினர் தயாராக இருப்பர். இப்படி சியாச்சின் அனுபவம் மிகவும் விசித்திரமாக இருக்கும். நாட்டுக்காக தனது சகோதர, சகோதரிகளை பாதுகாக்க தான் இத்தனை தியாகங்கயும் செய்கின்றனர்.

இவர்களுக்கு மதிப்பு அளிப்பது நமது கடமை. நாட்டின் சுதந்திரம், தேசத்தின் மீது நேசம் கொண்டு நம்மை இமை போல காக்கும் சியாச்சின் வீரர்ளுக்கு நன்றி சொல்வோம். ஜெய்ஹிந்த்!

வாரம் ஒருமுறை:

ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்வதற்கு வாரம் ஒருமுறை அனுமதிக்கப்படுகின்றனர். அலைபேசி இங்கு செயல்படாது. சாட்டிலைட் போன் மூலம் தான் பேச முடியும். காலநிலை மோசமாக இருக்கும் போது அதுவும் முடியாது.

ஊக்கத்தொகை

இங்கு பணிபுரியும் ராணுவ அதிகாரிகளுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 21 ஆயிரம் ரூபாய், வீரர்களுக்கு 14 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மேலே… கீழே…:

சியாச்சின்மலைத்தொடரின் உச்சியில் இந்தியா முகாம் அமைத்துள்ளது. பாகிஸ்தான் சல்டோரா ரிட்ஜ் மேற்கில், கீழ் பகுதியில் முகாமிட்டுள்ளது.

உயரமான போர்க்களம்:

தரையிலிருந்து 18,875 அடி உயரத்தில் உள்ள இம்மலை தான் உலகின் உயரமான போர்க்களம்.
நியூப்ரா ஆறுசியாச்சின் மலையில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவதால் உருவாகும் தண்ணீர் தான், லடாக் பகுதியில் நியூப்ரா ஆறாக ஓடுகிறது. 2003ம் ஆண்டில் இருந்து இந்தியா – பாக்., இடையே எவ்வித சண்டையும் ஏற்படவில்லை.

இந்தியா – பாகிஸ்தானை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இங்குபாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 1984ல் இருந்து இதுவரை 879 இந்திய ராணுவ வீரர்கள் தங்களது இன்னுயிரை இந்த பனி மலையில் இழந்துள்ளனர். இதில் அதிகபட்ச பலி என்பது, சண்டையில் ஏற்பட்டதல்ல. நிலச்சரிவு, பனிமழையால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளால் தான் ஏற்பட்டது.

மோடி உற்சாகம்:

இங்கு சென்ற முதல் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம். முதல் பிரதமர் மன்மோகன் சிங். தற்போதைய பிரதமர் மோடி 2014ல் இங்கு சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.

மலைத்தொடரின் நீளம் 77 கி.மீ.,உயரம் 20 ஆயிரம் அடி
காலநிலை :குளிர்காலத்தில் – 50 டிகிரி செல்சியஸ் வரை
பனிப்பொழிவு சராசரி ஆண்டுக்கு 1000 செ.மீ.,

ரோஜா கூட்டம்:

சியாச்சின் காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதி. லடாக்கில் இருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த மலைத்தொடரை முதன் முதலாக 1848ல் ஆங்கிலேயர் ஹென்ரி ஸ்டார்சி என்பவர் கண்டறிந்தார். சியாச்சின் என்ற வார்த்தைக்கு 'ரோஜாக்களின் வாழ்விடம்' என பெயர். கோடைகாலத்தில் மலை அடிவாரத்தில் 'வைல்டு ரோஜாக்கள்' இருந்ததால் இப்பெயர் வைக்கப்பட்டது.

வினாடிக்கு 18 ஆயிரம்
2012 – 13 – 2,281 கோடி ரூபாய்,
2013 – 14 – 1,919 கோடி ரூபாய்
2014 – 15 – 2,367 கோடி ரூபாய்
2015 முதல் தற்போது வரை 939 கோடி ரூபாய்சியாச்சின் மலையை காப்பதற்காக செலவிடப்பட்டுள்ளது.ஒரு நாளைக்கு 6.8 கோடி ரூபாயும், வினாடிக்கு 18 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது.

உயரமான 'ஹெலிபேட்':

சியாச்சின் மலையில் 20 ஆயிரம் அடி உயரத்தில் சோனம் என்ற இடத்தில் உலகின் உயரமான ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்குள்ள ராணுவ வீரர்களுக்கு தேவையான உணவு, உடைகள், போர் தளவாடங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.

பாதி:

2009ல் எடுக்கப்பட்ட ஒருஆய்வின்படிசியாச்சின் பனிமலை உருகி, பாதியாக குறைந்து விட்டது
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதனை வீரர்கள்:

கடந்த 2016 பிப்., 2ம் தேதி சியாச்சின் பனிமழையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 10 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். இதில் தமிழகத்தின் மதுரையை சேர்ந்த சிப்பாய் கணேசன், 25, தேனியை சேர்ந்த ஹவில்தார் குமார், 37, ஆகிய 2 ராணுவ வீரர்களும் வீர மரணம் அடைந்தனர்.

மீட்பு பணியின் போது 6 நாட்களுக்குப் பின் 35 அடி ஆழ பனியில் இருந்து கர்நாடகாவைச் சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற ராணுவ வீரர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். இது அதிசயமாக பார்க்கப்பட்டது. ஏனெனில் 6 நாட்கள் எவ்வித உணவின்றி, உறை பனியில் ஒருவர் உயிருடன் இருப்பது என்பது சவாலான ஒன்று. ஆனால் இவர் தினமும் யோகா பயிற்சி செய்பவர். இதனால் தான் தாக்குப்பிடிக்க முடிந்தது என கூறப்பட்டது. இவர் நலமுடம் திரும்ப நாடு முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன. இருப்பினும் 3 நாட்களுக்குப்பின் அவர் வீர மரணம் அடைந்தார். –இந்நன்னாளில் இவர்களுக்கு ஒரு சல்யூட்.

 

நன்றி தினமலர்

One response to “சியாச்சின் சாதனை வீரர்களுக்கு ஒரு சல்யூட்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...