பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் சுரக்கும். ஒரு சில மருத்துவ காரணங்களைத் தவிர மற்ற எல்லாயிடங்களிலும் தாய்மார்கள் தங்களின் மழலைகளுக்குத் தாய்பால் கொடுக்க வேண்டும்.
புரோட்டீன் ;
'புரோட்டீன்' அளவு உணவில் பாலூட்டுகின்ற பெண்களுக்கு கர்ப்பிணிகளை விட மிகவும் அதிகமாகத் தேவைப்படும். உணவில் 2 கி. புரோட்டீன் இருந்தால்தால் அது 1 கி. பாலின் புரோட்டீன் தயாரிக்கப் பயன்படுகிறது. பொதுவாக, புரோட்டீன் மிகுந்த பால், மீன், இறைச்சி, சோயாபீன்ஸ் ஆகியவற்றை இவர்களுக்குத் தர வேண்டும்.
கால்சியம் :
பாலூட்டும் தாய்மார்களுக்குத் தினமும் 2 கி. அளவு கால்சியம் தேவைப்படுகிறது.
கலோரி ;
தாய்மார்களுக்கு 100 மிலி; பால் உண்டாவதற்கு 130 கலோரி தேவைப்படுகிறது. சாதாரணமாக ஒரு நாளைக்கு 600 முதல் 800 மிலி பால் சுரக்கின்றபோது அதற்கு 800 முதல் 1000 கலோரி சக்தி தேவைப்படுகிறது.
தாய்ப்பாலின் சிறப்பு ;
'தாய்ப்பால்' அந்த குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்தையும், வைட்டமின், கால்சியம் போன்ற அனைத்தையுமே வழங்குகிறது.
குழந்தைகளின் ஜீரணத்திற்கு ஏற்ற உணவு அந்தத் தாயின் பால் தான். இதனால் இது பசுவின் பால் மற்றும் இதர பொடியினால் தயாரிக்கப்படும் பாலை விடச் சிறந்தது.
தாய்ப்பாலில் நோய்க் கிருமிகளை அழிக்கக்கூடிய 'நோய் எதிர்பொருட்கள்' மிகுந்திருக்கும். இதனால், குழந்தை பிறந்தவுடன் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறுகிறது.
நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.