மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.
முருங்கைக் கீரையை உணவாகக் கொள்ள கபம்,பித்த மயக்கம், கண்நோய், செரியா மாந்தம் தீரும்.
முருங்கைப் பூவைப் பருப்புடன் சமைத்துண்ணக் கண் எரிச்சல், வாய்நீர் ஊறல், வாய்க் கசப்பு மாறி குணம் உண்டாகும்.
இது முருங்கை மரத்தின் இலை. முருங்கைக் கீரை தாது புஷ்டி தருகிற கீரைகளில் ஒன்று. இரத்தத்திற்கும் உரம் அளிக்கிற உயிர்ச்சத்தும், எலும்புக்கு உரம் அளிக்கும் கால்ஷியம் என்னும் பொருளும் இதில் உண்டு. இந்தக் கீரையைச் சமைக்கும்போது இதனுடன் அரிசிமாவைத் தூவுவது பண்டைக்காலத்து வழக்கம்.
முருங்கைக்காயை அளவுடன் சாப்பிட்டுவர மார்புச்சளி, கபக்கட்டு நீங்கிக் குணம் உண்டாகும்.
முருங்கைக் கீரையை மூன்று கைப்பிடியளவு எடுத்து சட்டியிலிட்டு கருக்கி வர வெடித்துக் கருகி நெருப்புப்பற்றி எரிந்து உப்புக் கிடைக்கும் இதைத்தூள் செய்துப் பொடித்து பத்திரப்படுத்தி அரைத்தேக்கரண்டி வாயில்போட்டு வெந்நீர் குடித்துவர புளியேப்பம் மாறி பசியுண்டாகும்.
முருங்கை இலைச்சாறு அரைச்சங்களவு எடுத்து அதில் பட்டாணி அளவு உப்புப்போட்டு ஒருமுறை கொடுக்க வயிற்று உப்பிசம் தணிந்து குணமாகும்.
கவனமாக புழுநீக்கி எடுத்த முருங்கைப் பூவுடன் சமனளவு துவரம் பருப்பு சேர்த்து பகல் சாதத்துடன் சாப்பிட்டுவர உடல் பலமுண்டாகும். தினசரி 21 நாட்கள் சாப்பிட வேண்டும்.
விதை பிடிக்காத இளம் முருங்கை காய்களை உமிக் கருக்கில் சுட்டு நெகிழச் செய்து இடித்து சாறுபிழிந்து காய்ச்சிய பசும்பாலுடன் காலையில் மட்டும் சாப்பிட்டுவர தாது பலம் உண்டாகும். இதை 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.