கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி நடுவில் துளை செய்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து சுத்தமான துணியினால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விட வேண்டும். இந்த விதமாக மூன்று நாட்கள் செய்ய கண்வலி குணமாகும்.
கருவேலன் பட்டையைத் துண்டுகளாக நறுக்கி வெய்யிலில் காயவைத்து 30 கிராம் கிராம்பு 6 கிராம் மென்தால் சேர்த்து உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு காலை மாலை பல் துலக்கிவர பல்வலி குணமாகும்.
கருவேலம் பிசினை நெய்யில் வறுத்துப் பொடித்து 2 கிராம் காலை, மாலை சாப்பிட்டு வரத் தாது பலப்படும். இருமல், வயிற்றுப்போக்கு குணமாகும்.
வெட்டுப்பட்டக் காயத்தை சுத்தம் செய்து கருவேலன் இலையை நெகிழ அரைத்து காயத்தின்மேல் வைத்துக் கட்டிவிட்டால் வெட்டுக்காயப் புண் ஆறி குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.