சட்டப்பேரவை வளாகத்துக்குள் திமுகவினர் போட்டிப்பேரவை கூட்டம் நடத்தியதை ஆரோக்கியமான அரசியலாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் கூறினார்.
நாகை மாவட்டம், திருக்கடையூரில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது சரியான செயல் அல்ல. ஆனால், சட்டப்பேரவை வளாகத்தினுள் போட்டி பேரவைக்கூட்டம் நடத்தியது, சட்டப்பேரவைத் தலைவரைப் போல நடித்துக் காட்டியது, மேலும் அவரது உருவப்பொம்மையை எரித்தது போன்ற செயல்பாடுகளை ஆரோக்கிய அரசியலாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அந்தக்கட்சியின் தலைவர் கருணாநிதி சரியான வழியை காட்டவேண்டும். ஸ்டாலின் எதிர்க்கட்சியை வழி நடத்தும் தலைவராக இருப்பதைவிட அதிகமாக வெளிநடப்பு செய்யும் தலைவராகவே உள்ளார். தமிழகத்தில் காவல்துறையில் 20 ஆயிரம் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்ரமணிய சிவாவுக்கு மணிமண்டபம் ஏற்படுத்திய தமிழக முதல்வர், அவரது கனவான பாரதமாதா கோயிலை எழுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி பிரச்னையில் நமக்குரிய நீர் நிச்சயம் கிடைக்கவேண்டும். இரு மாநிலங்களுக்கு இடையேயான நீர் பிரச்னையில் எந்த மாநிலமும் பாதிக்கப்படக்கூடாது என்பதே மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது. காவிரி பிரச்னையில் குறைசொல்வதற்கு கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு உரிமையில்லை.
உள்ளாட்சித் தேர்தலை பலம் பொருந்திய கட்சியாக எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது என்றார்.
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.