பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித்-பல்திஸ்தான் ஆகியபகுதிகளில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அகதிகளாக வந்த மக்களுக்காக ரூ.2,000 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 1947-ஆம் ஆண்டிலும், 1965 மற்றும் 1971-ம் ஆண்டுகளிலும் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர்களின் போதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானின் மேற்குப்பகுதிகள் ஆகியவற்றில் இருந்து ஏராளமான அகதிகள் இந்தியாவுக்கு வந்தனர். அவர்கள் தற்போது, ஜம்முகாஷ்மீரில் உள்ள ஜம்மு, கதுவா, ரஜெளரி ஆகிய பகுதிகளில் குடியேறினர். ஆனால், ஜம்முகாஷ்மீர் அரசியல்சாசனம் காரணமாக அந்த அகதிகளால் குடியுரிமை பெற முடியவில்லை.
அந்தமக்கள் மக்களவை தேர்தலில் வாக்களித்தாலும், ஜம்முகாஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க முடியாது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கு பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளின் பிரச்னைகளைக் கேட்டறிந்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர்களுக்கு சில சலுகைகளை அறிவித்தது. அதன்படி, துணை ராணுவப் படைகளில் சேர்தல், மாநிலத்தில் வேலைவாய்ப்புகளைப் பெறுதல், அகதிகளின் குழந்தைகளுக்கு கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் சேர அனுமதி உள்ளிட்ட சலுகைகள் அவற்றில் அடங்கும்.
இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்கித்-பால்டிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அகதிகளாக வந்த மக்களுக்காக ரூ.2,000 கோடி மதிப்புள்ள நலத் திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, 36,348 குடும்பங்களை ஜம்மு-காஷ்மீர் அரசு கண்டறிந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5.5 லட்சம் மதிப்புள்ள நலத் திட்டங்கள் கிடைக்கும். அந்தத் திட்டங்கள் குறித்த பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை இன்னும் ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறோம் என்று அந்த உயரதிகாரி தெரிவித்தார்.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.