ஜம்மு காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்க சதி வெற்றிகரமாக முறியடிக்கும் இந்திய ராணுவம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச்சேர்ந்த நபர்களுக்காக ஆயுதங்களை கடத்திச் சென்ற நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

ஜம்மு – காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18, 25 மற்றும் அக்., 1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறஇருக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெற இருப்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான பகுதிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பூச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர்களின் கையாளாக செயல்பட்டு வந்த நபரை பாதுகாப்பு படைவீரர்கள் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 3 கையெறி குண்டுகள் உள்பட வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் முகமது ஷபீர் என்பதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த அஷிம் கான் என்பவருக்காக சூரன்கோட்டில்இருந்து ஆயுதங்களை எடுத்துச் செல்வதும் தெரிய வந்தது.

ஏற்கனவே, குப்வாரா மாவட்டம், கெரான் செக்டாரில் உள்ளவனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், பயங்கரவாதிகளின் மறைவிடத்தை முறியடித்து, பெரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டனர். மேலும், கடந்தஜூலை மாதம்கத்துவா தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஜெய்-இ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேரை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்திருந்தனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதசெயல்களை கண்டறிந்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து முறியடித்து வருகின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...