பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. சதை நரம்புகளைச் சுருங்கச் செய்வதாகவும், தாது பலமுண்டாக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.
பொடுதலை, சமூலச் சாற்றில் சமனளவு, நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து வாரம் இருமுறை தலைமுழுகிவரத் தலையில் உள்ள தோல்நோய், பொடுகு முதலியன தீர்ந்து குணமாகும்.
பொடுதலை இலையுடன் இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து துவையலாக்கிச் சுடுசோற்றில் நெய்யுடன் உண்டுவர மார்புச்சளி, சுவாசக் காசம் தீர்ந்து குணமாகும்.
பொடுதலை இலையுடன் சீரகம் சமனளவு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து எருமைத்தயிர் அல்லது வெண்ணெயில் கொடுக்க வெள்ளை படுதல் வெட்டைச்சூடு ஆகியவை தீர்ந்து குணமாகும்.
பொடுதலை இலை கைப்பிடி அளவு எடுத்து வெள்ளைப் பூண்டு ஏழு, மிளகு 15, சுக்கு ஒரு பாக்களவு சேர்த்து நெகிழ அரைத்து வாயிலிட்டு வெந்நீரில் குடுத்துவிட வேண்டும். இவ்விதமாக வெறும் வயிற்றில் 7 நாட்கள் செய்து உப்பிலாப் பத்தியம் இருந்து துவரம் பருப்பை மட்டும் வறுத்து தொட்டுக்கொள்ளச் செய்யவும்.
பொடுதலை இலையை சிறிய மஞ்சள் துண்டுடன் சேர்த்து அரைத்து ஆறாத புண்ணின்மேல் வைத்துக்கட்டி வந்தால் புண் ஆறி குணமாகும். தினசரி இவ்விதம் செய்து வரவேண்டும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.