தேசிய ஒருமைப்பாட்டிற்கே காங்கிரஸ் தீ வைத்துக் கொண்டிருக்கிறது

கர்நாடகாவில் நடந்து கொண்டிருப்பவை கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அங்குள்ள தமிழர்கள் தாக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  அதுவும் பேருந்துகளை வெறித்தனமாக எரித்தது அரசியல் அநாகரிகத்தின், அராஜகத்தின் உச்சக்கட்டம். அந்த நிகழ்வுகளை படம் பிடித்த வட இந்திய தொலைக்காட்சிகள் அங்குள்ள காவல் துறையின் இந்நிகழ்வுகளை கண்டிப்பவர்களாகத் தெரியவில்லை.

கண்டும் காணாதவர்களாகவே செயல்பட்டார்கள்  என்று தகவல் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்ல இவ்வளவு கலவரங்கள் நடக்கும் போது அங்கு போதிய காவல்துறையினர் இல்லை என்பதும் அவர்கள் அதிகார பூர்வமாக கொடுக்கும் தகவலாகவோ இருக்கிறது.  அதனால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா செயல்படாமல் வேண்டுமென்றே இருந்து விட்டு மற்றவர்கள் வெறியோடு செயல்பட வேண்டுமென்றே இருப்பதைப் போலவே தான் ஓர் சூழ்நிலை அங்கு இருக்கிறது.

    இன்று மத்திய உள்துறை அமைச்சர் மரியாதைக்குரிய திரு. ராஜ்நாத் சிங் தலையிட்டு அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் அறிவித்த பின்பு தான் இன்று அங்கு ஓரளவு நடவடிக்கையாவது எடுக்கப்பட்டு வருகிறது.  அதுமட்டுமல்ல இல்லாத பிரச்சினைக்கு பாதயாத்திரை செய்து கொண்டிருக்கும் ராகுல்காந்தியும், காஷ்மீர் பிரச்சனையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர்களும் பெங்களுர் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டும் காணாமல் இருப்பது தமிழர்களின் உணர்வுகளையும், உயிர்களையும் பலி கொடுத்து கர்நாடகாவில் குளிர்காய வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. 

அங்குள்ள கலவரங்களை  அடக்க முடியாத சித்தராமய்யா உடனே பதவி விலக வேண்டும்.  மத்திய அரசு தலையிட்ட பின்பு தான் அங்கு கொஞ்சமாவது அமைதி திரும்பியிருக்கிறது.  அதுமட்டுமல்ல இது ஓணம் பண்டிகைக்காலம், பெங்களுரில் இருந்து கேரளாவிற்கு செல்ல மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  தாக்குதலுக்குள்ளான தமிழர்கள் சாரை சாரையாக தமிழகத்திற்கு நடந்தே வந்துக்கொண்டிருக்கிறார்கள்.  தேசிய ஒருமைப்பாட்டிற்கே காங்கிரஸ் தீ வைத்துக் கொண்டிருக்கிறது.  அது மட்டுமல்ல இதனால் பாரதிய ஜனதா கட்சியின் மீது அநாவசியமாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கிறது.  

அங்குள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டிய நிலை பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை.  மரியாதைக்குரிய திரு. வெங்கையா நாயுடு,  திரு. ராஜ்நாத்சிங் போன்றவர்கள் அங்கு நடக்கும் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள்.  நம் பிரதமர் திரு. மோடி  அவர்கள் கர்நாடகாவில் நடக்கும் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு மன வேதனை தெரிவித்திருக்கிறார்.  கர்நாடகாவில் காங்கிரஸ் அரசியல் செய்வதை விட்டு உடனே அமைதி திரும்ப வழி செய்ய வேண்டும்.  அதுமட்டுமல்ல தமிழர்களை தூண்டிவிடும் தேசவிரோத சக்திகளின் சூழ்ச்சிக்கு தமிழர்கள் பலியாகக் கூடாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓரளவு நமக்கு கிடைக்க வேண்டிய நியாயம் கிடைத்துக் கொண்டிருக்கும் வேளையில் வன்முறை எந்தவிதத்திலும் அதைக் கெடுத்து விடக்கூடாது என்றும் வன்முறை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பதையும் அனைவரும் தெளிவாகப் புரிந்து நாள்தோறும் பெங்களுரின் முன்னேற்றத்திற்கு தமிழகர்களின் பங்கு அளவிட முடியாதது என்பதையும் சித்தராமய்யா உணர வேண்டும்.  அவர்களை அடிப்பதும் எரிக்க முயற்சிப்பதும் பெங்களுரின் முன்னேற்றத்தையே அழிப்பதாகும்.  சித்தராமய்யா உடனே இந்தக் கலவரங்களைக் கட்டுப்படுத்தவில்லையென்றால் வருங்காலத்தில் இந்த சூழ்நிலை பதவி இறங்கவோ, இழக்கவோ தான் உதவும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

Dr. தமிழிசை சௌந்தரராஜன்  
மாநில  தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...