"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ஆஸ்துமா உண்டாகி மூச்சுத்திணறல் ஏற்படும்.
இவர்கள் மிகவும் குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் ஆகியற்றைப் பருகக்கூடாது. மேலும், குளிர்ச்சாதன பெட்டியில் வைத்த எந்த உணவையும் இவர்கள் உண்ணவே கூடாது. அதிக எண்ணெய்ச் சத்துமிக்க உணவைத் தவிர்க்க வேண்டும். அதிக 'காரம்' நிறைந்த குழம்பு வகைகள், உணவு வகைகள், ஊறுகாய் ஆகியவற்றையும் குறைக்க வேண்டும். தயிர், வெண்ணெய், நெய், அதிகம் நெய்யிலோ வெண்ணெயிலோ வறுத்த உணவைத் தவிர்க்க வேண்டும்.
இவர்கள் பல்வேறு மீன்கள் குறிப்பாக கடல்மீன்கள், மாமிச வகைகள், முட்டை ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
மதுபானங்களை விட்டொழிக்க வேண்டும்.
இவர்கள் பொதுவாக……
அதிக அளவு நீர் பருகல் வேண்டும். சிறிது சூடான நீரையே குளிப்பதற்கு, குடிக்கப் பயன்படுத்துவது நல்லது.
அதிக அளவு பச்சைக் காய்கறிகளை உண்ண வேண்டும்.
வயிறு நிறைய ஒரே நேரத்தில் உணவு உண்ணக் கூடாது.
அடிக்கடி குறைந்தளவு உணவை உண்ண வேண்டும். இரவு நேர உணவைப் படுப்பதற்கு பலமணி நேரம் முன்பாகவே உண்ண வேண்டும்.
பல்வேறு பழங்கள் குறிப்பாக, பச்சைப்பழம், அன்னாசிப்பழம், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது.
வெள்ளரிக்காயும் தரக்கூடாது.
நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.