பசியும், பட்டினியும் இல்லாத பாரதம்

திமுக ஆட்சி கொடுக்கும் ரூ.1000/- இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி தான் கிடக்க வேண்டும் என தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அகங்காரத்தோடு பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும் இந்தியாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் தான் மக்கள் மூன்று வேளையும் உணவு உண்ணுகிறார்கள் மஹாராஷ்ட்ரா உள்பட மற்ற மாநிலங்களில் 30% முதல் 40% மக்கள் ஒருவேளை தான் உணவு உண்ணுகிறார்கள் என்று உண்மைக்கு மாறான பொய்யான தகவலை பொதுவெளியில் பேசி இருக்கிறார்.
ஆனால் உண்மை என்னவெனில்…

பசியும், பட்டினியும் இல்லாத பாரதத்தை காணவேண்டும் என்கிற உன்னதமான நோக்கத்தோடு அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டம் என்கிற பெயரில் ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தை முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா திரு.அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் கொண்டு வந்தார்கள்.

பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் மானியமாக வழங்கி வருகிறார். அதுவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து இலவசமாக வழங்கி வருகிறார். தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிற உணவுப் பொருட்கள் அனைத்தும் மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிற பொருட்கள் தான்.
உண்மை நிலையை மறைத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் திமுக ஆட்சி கொடுக்கும் ரூ.1000/- பணத்தில் தான் தமிழக மக்கள் பசியாறுகிறார்கள் என்று பேசி இருப்பது திமுகவின் ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறது.

மேலும் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டு வருகிற ரூ.1000/- மகளிர் உரிமைத் தொகையை வீட்டுவரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு என திமுக அரசே பல பெயர்களில் வரியை உயர்த்தி மக்களிடம் இருந்து கட்டண உயர்வு மூலம் பலமடங்கு திரும்ப வசூலித்து விடுகிறது.

திருடர்கள் வழிப்பறி செய்வது போல இந்த திராவிடர்கள் ஆட்சியாளர்கள் என்கிற பெயரில் அனைத்து வரிகளையும் உயர்த்தி கட்டண உயர்வு என்கிற பெயரில் மக்களிடம் இருந்து “வரி”ப்பறி செய்து வருகிறார்கள்.

மேலும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்கும் போது 2021- 2022 நிதியாண்டில் தமிழகத்தின் கடன் தொகை ரூ.4,56,660.99/- கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.8,33, 361/- கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் பெயரில் திமுக அரசு ரூ.3,76,700.81/- கோடி கடன் வாங்கி இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களில் மேலும் ரூ.1.05/- லட்சம் கோடி கடன் வாங்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது.

கடன் வாங்கி ஆட்சி நடத்தும் போதே திமுக அரசு இவ்வளவு ஆணவமாக பேசுகிறதே? மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க உற்பத்தி சார்ந்த துறைகளில் முதலீடு செய்ய, வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய கடன் வாங்குவதில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் மாநிலத்தின் நிர்வாக செலவினங்களுக்காகவும், ஏற்கனவே வாங்கிய கடனை அடைப்பதற்காகவும் கடன் வாங்குவது எவ்வளவு மோசமானது என்பது குறித்து திமுக அரசு சிந்திப்பதாக தெரியவில்லை.

கடன் வாங்கி ஆட்சி நடத்தும் போதே ஆணவத்தோடும், அகங்காரத்தோடும் திமிராக பேசுகிறதே திமுக? திமுக திருத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்பதற்கும் திமுக அமைச்சர்களின் ஆணவ நடவடிக்கைகளும் ஒரு உதாரணம்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.1000/- வழங்குவதாக பெருமை பேசுகிறதே திமுக அரசு…
திமுக ஆட்சிக்கு வந்த போது தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பெயரில் இருந்த கடன் ரூ.2,15,517/- கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.3,70,026/- (வருகிற 2025 மார்ச் மாதம் வரும் போது தமிழகத்தின் மொத்த கடன்தொகை அளவின் விகிதாச்சார அடிப்படையில்) உயர்த்தியுள்ளதே திமுக அரசு. அதுவும் மூன்றே ஆண்டுகளில் ரூ.1,54,509/- கடனை கூடுதலாக ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் சுமக்க வைத்திருக்கிறதே அதற்கு பொறுப்பேற்க வேண்டியது திமுக தானே அதுகுறித்து திமுக தலைவர்கள் பேசத்தயாரா? தமிழக முதல்வர் திரு. M. K. Stalin அவர்கள் இதற்கு பதிலளிப்பாரா?.

நன்றி H.ராஜா

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...