கேரளாவில் தற்போது ஆளுங்கட்சியாக கம்யூனிஸ்டுகட்சி உள்ளது. எதிர்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டுவருகிறது. பா.ஜ.க ஒரு எம்.எல்.ஏ.வுடன் கேரள அரசியலில் கால்ஊன்றி உள்ளது.
இந்தநிலையில் சமீபகாலமாக கம்யூனிஸ்டு பா.ஜ.க வினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதில் பலர் கொலையுண்டு உள்ளனர். இந்த அரசியல் தாக்குதல் கேரள பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே காஞ்சிரக்கோடு பாலையார் என்ற இடத்தில் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையேமோதல் ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் அந்த பகுதியை சேர்ந்த பா.ஜனதா மகளிர் அணிபொறுப்பாளர் விமலா தேவி (வயது 38) என்பவர் வீட்டிற்கு கம்யூனிஸ்டு தொண்டர்களால் தீவைக்கப்பட்டது. இதில் வீட்டில்இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து விமலாதேவியும் அவரது கணவர் மணியும் படுகாயம் அடைந்தனர்.
அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் விமலாதேவி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்துபோனார்.
இந்த தகவல் கிடைத்ததும் பாஜக எம்.எல்.ஏ. ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
விமலாதேவி மரணத்தை தொடர்ந்து இன்று பாலையார் பகுதியில் முழு அடைப்புபோராட்டத்திற்கு பாரதிய ஜனதா அழைப்பு விடுத்தது. விமலாதேவி மரணத்தைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.