லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில் பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமருடன் ஆலோசனை

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவிடம் தொலை பேசி வாயிலாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இப்போது லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார். லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி இஸ்ரேல்பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை தொலை பேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உரையாடலின் போது மேற்காசியாவின் தற்போதைய நிலை குறித்து இருபிரதமர்களும் விவாதித்தனர். அப்போது உலகில் பயங்கரவாதத்திற்கு என்றுமேஇடமில்லை, மேற்காசியாவில் அமைதி, மறுசீரமைப்புக்கு இந்தியா ஆதரவுதரும். லெபனானில் அகதிகளாக இடம் பெயர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பன குறித்து பிரதமர் மோடி , நெத்தன்யாகுவிடம் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...