ராம்நாத் கோவிந்த் இந்த பெயர் அறிவிக்கப்படும் முன் பெரிதாக நான் இவரின் மேல் கவனம் செலுத்தவில்லை எப்படியும் ஒரு பட்டியல் சாதியினரோ அல்லது பழங்குடியினரோ தான் ஜனாதிபதியாக வருவார் என்று மட்டும் அறிந்திருந்தேன். திரௌபதி முர்மு என்ற ஜார்கண்ட் மாநில ஆளுநர் பெயர் தான் அதிகமாக அடிபட்டுக்கொண்டு இருந்தது. பெண் அதோடு பழங்குடியினர் என்பது அவருக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தியது இருப்பினும் ராம்நாத் கோவிந்த் இன்று சரியான நபராக அந்த பதவிக்கு முற்றும் தகுதி வாய்ந்தவராக அறியப்படுகிறார்.
இந்திய குடிமை பணியில் வெற்றி பெற்றவர் தான் விரும்பிய துறை கிடைக்காததால் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனவர். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனி செயலராகவும் இருந்திருக்கிறார் அதோடு டெல்லி உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் பல ஆண்டுகளாக வக்கீல் பணி செய்து வந்திருக்கிறார். அரசியல் சாசன சட்டத்தில் மிக தேர்ச்சி உள்ளவர் என்று சொல்லப்படுகிறது இந்த பதவிக்கு மிக முக்கியமான தேவை அது. அதோடு பெரும் அறிஞர் இந்திய கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர். 12 ஆண்டுகள் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்திருக்கிறார் இன்று பீகார் கவர்னர்.
கோலி என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கோவிந்த் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் உழைத்தவர் இன்று நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரிக்க இருக்கிறார். பாஜக சாதி ஹிந்துக்களுக்கும் உயர் சாதியினருக்குமான கட்சி அது தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியவர்களுக்கு எதிரானது என்று தொடரப்பட்டு வரும் பொய் பிரசாரம் பல காலமாக பல் இளிக்கிறது இருந்தும் ஊடக வியாபாரிகளாலும் இந்திய அரசியலில் செல்லாக்காசாகிப் போன இடதுசாரி அடிவருடிகளாலும் மற்ற எதிர் கட்சிகளாலும் இது தொடர்ந்து வாந்தியெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
நியூயார்க் டைம்ஸ், எகானாமிஸ்ட், வாஷிங்டன் போஸ்ட் போன்ற பல மேலை நாட்டு இதழ்கள் தங்களை முற்போக்கு மற்றும் தாராளவாதிகள் என்று காண்பித்துக்கொண்டு கிளிப்பிள்ளை போல் நம் ஊர் பழுப்பு ஆங்கிலேயர்களின் உச்சாடனத்தையே திரும்ப திரும்ப உருவேற்றி வருகின்றன. அவர்கள் சவப்பெட்டியில் அடித்த கடைசி ஆணி இது என்றே நான் கருதுகிறேன். இந்தியாவின் ஆன்மாவை மோதியை விட நன்றாக அறிந்தவர் வேறு யாரும் இல்லை என்பதையே இது மீண்டும் நிரூபிக்கிறது. இவரின் வெற்றி என்பது முடிவான ஒன்று வேறு வேட்பாளர்கள் யாரும் நிற்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
நன்றி; முத்துசாமி
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.