“இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு ஸ்வீடன் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி

"இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு ஸ்வீடன் அளித்துவரும் ஆதரவுக்கு, அந்த நாட்டு பிரதமர் ஸ்டெஃபான் லோஃப்வெனிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் நன்றி தெரிவித்தார்.

இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஸ்வீடன்பிரதமர் ஸ்டெஃபான் லோஃப்வெனுடன் வியாழக் கிழமை தொலைபேசியில் உரையாடினேன். அப்போது, "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு அந்த நாடு அளித்து வரும் ஆதரவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன் என்று அந்தப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மும்பையில் கடந்த ஆண்டு நடைபெற்ற "இந்தியாவில் தயாரிப்போம்' கண்காட்சியில் ஸ்வீடன் பிரதமர் கலந்து கொண்டார்.

அந்த நாட்டின் முன்னணி நிறுவனங்கள் உள்பட 18-க்கும் மேற்பட்ட ஸ்வீடன் நிறுவனங்கள் அந்தக்கண்காட்சியில் பங்கேற்றன.

அந்த நிறுவனங்களின் காட்சியகபிரிவை பிரதமர் மோடியும், ஸ்டெஃபான் லோஃப்வேனும் கூட்டாகத் திறந்துவைத்தனர்.

இந்தியாவில் தற்போது 160 ஸ்வீடன் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் 1.6 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 11 லட்சம்பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்துவருகிறது.

இதுகுறித்து இந்தியாவுக்கான ஸ்வீடன் நாட்டுத்தூதர் ஹெரால்டு சாண்ட்பெர்க் கூறியதாவது:

ஸ்விடன் எப்போதும் மிகச்சிறந்த வர்த்தக கூட்டாளிகளையே நாடும்.

இந்தியாவில் ஸ்வீடன் நாட்டின் எரிக்ஸன் நிறுவனம்தான் முதல்முறையாக மின் கம்பிகளை கடந்த 1903-ஆம் ஆண்டு நிறுவியது. அன்று முதல் இன்றுவரை இந்தியாவில் முதலீடுகளை அதிகரிப்பதில் ஸ்வீடன் ஆர்வம்காட்டி வருகிறது என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...