நாடுமுழுவதும் உள்ள 1.6 லட்சம் பாலங்களில் மத்திய நெடுஞ் சாலைகள் துறை அமைச்சகம் பாதுகாப்பு சோதனையை நடத்தி முடித்துள்ளதாக அத்துறையின் அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது:
விவபத்துகளைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக நாடு முழுவதும் உள்ள அனைத்து விதமான பாலங்கள் மற்றும் தரைப் பாலங்கள் ஆகியவை பற்றிய தகவல் தொகுப்பை உருவாக்குவதற்காக ஒருங்கிணைந்த பாலமேலாண்மை அமைப்பை (ஐபிஎம்எஸ்) எங்கள் அமைச்சகம் கடந்த ஆண்டு தொடங்கியது.
அதன்படி, முதல் கட்டமாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 186 பாலங்களை அந்த அமைப்பு சோதித்து முடித்துவிட்டது.
அவற்றில் 147 பாலங்கள் மிகவும் மோசமான நிலையிலும், உடனடி கவனம்செலுத்த வேண்டியவையாகவும் உள்ளன. மேற்கண்ட பாலங்களில் 23 பாலங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை.
பாலங்களை கண்காணிக்க நானோ, லேசர், சென்சார் போன்ற நவீனதொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றைச் சோதனை செய்வதற்கு ராடார்கள், அகச்சிவப்புக்கதிர் வசதி கொண்ட ஆளில்லா குட்டி விமானங்கள் ஆகியவை பயன்படுத்தப்படும்.
ஐபிஎம்எஸ் அமைப்பு கடந்த ஆண்டில் ரூ.300 கோடி செலவில் உருவாக்கப் பட்டது. இந்த அமைபப்பை உருவாக்குவதற்கு முன்பு பாலங்களை வரைபடரீதியில் அடையாளம் காண எந்தவொரு அமைப்பும் இல்லை. பல்வேறு பாலங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. அவை இடிந்துவிழும் நிலையில் உள்ளன.
தற்போது 1.6 லட்சம் பாலங்கள் குறித்த தகவல்தொகுப்பை ஐபிஎம்எஸ் அமைப்பு உருவாக்கியுள்ளது. அவை பல்வேறு வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது பாதுகாப்பு பிரச்னைகளை தீர்ப்பதற்கான நுணுக்கமான தகவல்களைக் கொண்டிருக்கும் என்றார் கட்கரி.
கடந்த மாதம் 30 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎம்எஸ் அமைப்பின் கூட்டத்துக்கு அவர் தலைமைவகித்தார். பாலங்களின் தேசிய அடையாள எண், அட் ரேகை, தீர்க்க ரேகை போன்ற விவரங்கள், பாலம் அமைந்துள்ள பகுதியின் சமூக}பொருளாதாரத் தகவல்கள் போன்ற விவரங்களை ஐபிஎம்எஸ் அமைப்பு திரட்டியுள்ளது.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.