பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார்

பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று குஜராத் செல்கிறார். காலை 10 மணியளவில், ஸ்பெயின் பிரதமர் திரு பெட்ரோ சான்செஸுடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் வளாகத்தில் சி-295 போர் விமானங்களை தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை கூட்டாக  பிரதமர் திறந்து வைப்பார். அதன்பிறகு காலை 11 மணியளவில் வதோதராவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனைக்கு செல்கிறார். வதோதராவிலிருந்து அம்ரேலி செல்லும் பிரதமர், அங்கு பிற்பகல் 2.45 மணிக்கு அம்ரேலியில் உள்ள துதாலாவில் பாரத மாதா சரோவாரைத் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3 மணியளவில், அம்ரேலியில் உள்ள லாத்தியில் ரூ .4,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

வதோதராவில் பிரதமர்.

டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் வளாகத்தில் சி-295 போர் விமானங்களை உற்பத்தி  செய்வதற்கான டாடா விமான வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் இணைந்து தொடங்கி வைக்கின்றனர். சி -295 திட்டத்தின் கீழ் மொத்தம் 56 விமானங்கள் உள்ளன, அவற்றில் 16 விமானங்கள் ஸ்பெயினில் இருந்து ஏர்பஸ் மூலம் நேரடியாக வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 40 இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.

டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் இந்த 40 விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும்  பொறுப்பில் உள்ளது. இந்த வசதி இந்தியாவில் ராணுவ விமானங்களுக்கான முதல் தனியார் துறை இறுதி அசெம்பிளி லைன் (எஃப்ஏஎல்) ஆகும். இது உற்பத்தி முதல் அசெம்பிளி வரை, சோதனை மற்றும் தகுதி வரை, விநியோகம் முதல்  பராமரிப்பு வரை விமானத்தின் முழுமையான சூழல் அமைப்பின் முழு வளர்ச்சியை இது உள்ளடக்கியிருக்கும்.

டாடா தவிர, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் போன்ற முன்னணி பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இந்த திட்டத்தில் பங்களிக்கும்.

முன்னதாக 2022 அக்டோபரில், வதோதரா  அசெம்பிளி லைன்  திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல்  நாட்டினார்.டாடா தவிர, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் போன்ற முன்னணி பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இந்த திட்டத்தில் பங்களிக்கும்.முன்னதாக 2022 அக்டோபரில், வதோதரா இறுதி அசெம்பிளி லைன் (FAL) திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

அம்ரேலியில் பிரதமர்

அம்ரேலியில் உள்ள துதாலாவில் பாரத மாதா சரோவரை பிரதமர் தொடங்கி வைப்பார். குஜராத்  அரசு,  தோலாகியா அறக்கட்டளை இடையேயான ஒத்துழைப்பின் மூலம் பொது-தனியார் கூட்டாண்மை  மாதிரியின் கீழ் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. தோலாகியா அறக்கட்டளை ஒரு தடுப்பணையை மேம்படுத்தியது. இதனால் முதலில் அணையில் 4.5 கோடி லிட்டர் தண்ணீரை வைத்திருக்க முடிந்தது. ஆனால் அதை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, வலுப்படுத்திய பின், அதன் திறன் 24.5 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. இந்த மேம்பாடு அருகிலுள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைகிணறுகளின் நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளது.  இது உள்ளூர் கிராமங்களுக்கும் விவசாயிகளுக்கும் சிறந்த நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கு உதவும்.

குஜராத் மாநிலம் அம்ரேலியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி சுமார் ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். இந்தத்திட்டங்கள் அம்ரேலி, ஜாம்நகர், மோர்பி, தேவபூமி துவாரகா, ஜூனாகத், போர்பந்தர், கட்ச், போடாட் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பயனளிக்கும்.

ரூ.2,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல்  நாட்டுகிறார். தேசிய நெடுஞ்சாலை 151, தேசிய நெடுஞ்சாலை 151ஏ, தேசிய நெடுஞ்சாலை 51 ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளை நான்கு வழிச்சாலையாக மாற்றுதல், ஜூனாகத் புறவழிச்சாலை உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன. ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள துரோல் புறவழிச்சாலையில் இருந்து மோர்பி மாவட்டத்தில் உள்ள அம்ரான் வரை மீதமுள்ள நான்கு வழிப்பாதை திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்படும்.

சுமார் ரூ.1,100 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள புஜ் நலியா ரயில் பாதை மாற்றுத் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்த விரிவான திட்டத்தில் 24 பெரிய பாலங்கள், 254 சிறிய பாலங்கள், 3 சாலை மேம்பாலங்கள் மற்றும் 30 சுரங்கப் பாதைகள் உள்ளன. இது கட்ச் மாவட்டத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

அம்ரேலி மாவட்டத்தில் இருந்து குடிநீர் வழங்கல் துறையின் ரூ .700 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார். தொடங்கப்படவுள்ள திட்டங்களில் நவ்டா முதல் சாவந்த் வரையிலான  குழாய் திட்டமும் அடங்கும், இது 36 நகரங்கள் மற்றும் போட்டாட், அம்ரேலி, ஜூனகத், ராஜ்கோட், போர்பந்தர் மாவட்டங்களின் 1,298 கிராமங்களில் சுமார் 67 லட்சம் பயனாளிகளுக்கு கூடுதலாக 28 கோடி  லிட்டர் தண்ணீரை வழங்கும். பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள மஹுவா, தலஜா, பாலிதானா தாலுகாக்களில் உள்ள 95 கிராமங்களுக்கு பயனளிக்கும் பசவி குழும விரிவாக்க நீர் வழங்கல் திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்படும்.

போர்பந்தர் மாவட்டம் மொகர்சாகரில் உள்ள கார்லி நீர்ச்செறிவூட்டும் நீர்த்தேக்கத்தை உலகத் தரம் வாய்ந்த நீடித்த சுற்றுச்சூழல் சுற்றுலா தலமாக மாற்றுவது உள்ளிட்ட சுற்றுலா தொடர்பான மேம்பாட்டு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...