நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை கட்டி வழங்க பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2015 ஜூன் 25 முதல் செயல்படுத்தப்படுகிறது.
15.07.2024 நிலவரப்படி, 118.63 லட்சம் வீடுகளை கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றில் 114.33 லட்சம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. இவற்றில் 85.04 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 31.12.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், திட்ட வழிகாட்டுதல்களின்படி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையில் வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசின் உதவி மூன்று தவணைகளில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 40%, 40% மற்றும் 20% என்ற விகிதத்தில் விடுவிக்கப்படுகிறது. இதுவரை மொத்தம் ₹ 1,99,652 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு டோகான் சாஹு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |