பிரதமர் நரேந்திரமோடி குஜராத் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் வான்வழி ஆய்வுசெய்ய உள்ளார்.
வடக்கு குஜராத்தில் வெள்ள பாதிப்புபகுதிகளை அவர் பார்வையிட உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. குஜராத் மாநிலத்தில் கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துகாணப்படுகிறது. குறிப்பாக வடக்கு குஜராத்தில் பதான், பனாஸ் கந்தா மாவட்டங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில்மூழ்கி உள்ளன. அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
இந்தசூழ்நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, இன்று காலை தில்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். அப்போது, குஜராத்தில் பெய்துவரும் தொடர்மழை மற்றும் வெள்ளம் தொடர்பான நிலவரத்தை எடுத்துரைத்தார். மேலும் குஜராத் வந்து நிலைமையை பார்வையிடவும் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி குஜராத்சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட முடிவு செய்துள்ளதாக உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.